பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பிற்காலச் சோழர் சரித்திரம் இடைதுறை நாட்டிலிருந்த மாடதூஜுரு என்ற ஊரை மேலைச்சளுக்கிய மன்னனாகிய சயசிங்கன் என்பான், கி. பி. 1024-ல் அந்தணன் ஒருவனுக்கு இறையிலியாக அளித்தனன் என்று மிராஜ் செப்பேடுகள் கூறுகின்றன 1. ஆதலால் அவ்வாண்டில் அந்நாடு சயசிங்கன் ஆட்சிக்கு உட்பட்டதாயிருந்திருத்தல் வேண்டும். ஆகவே, இரட்ட பாடி இராச்சியத்தில் துங்கபத்திரை யாற்றிற்கு வடக்கே யுள்ள பகுதிகளை மீண்டும் சயசிங்கன் கைப்பற்றித் தன் ஆட்சிக்கு உட்படுத்திக்கொண்டனன் எனலாம். ஆனால், அவ்விராச்சியத்தில் அப்பேராற்றிற்குத் தெற்கேயுள்ள பகுதிகள் இராசேந்திர சோழன் ஆளுகைக்கு உட்பட்டிருந் தன என்பது ஒருதலை. இனி, இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டுக் கல் வெட்டில் இவனது வடநாட்டுப் படையெழுச்சி கூறப்பட் டுளது. அதில் இவ்வேந்தன் படைகள் வட நாட்டில் புரிந்த வீரச்செயல்கள் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. அந் நிகழ்ச்சிகள் கி. பி. 1023-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடை பெற்றிருத்தல் வேண்டும். அவற்றை ஆராயுமிடத்து, அவைகள் எல்லாம் முடிவுபெறுதற்குக் குறைந்த அளவில் இரண்டு ஆண்டுகளாயினும் சென்றிருத்தல் வேண்டும் என்று கூறுவது மிகப்பொருந்தும். இராசேந்திரனது வடநாட்டுப் படையெழுச்சிக்குக் கார ணம், இவன் கங்கை நீரைக் கொணர்ந்து தன் நாட்டைத் தூய்மையாக்குவதற்குக் கருதினமையேயாம் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகின் றது 2. எனவே, இவன் தன் ஆட்சியில் புதிய தலை நகர் ஒன்று அமைப்பதற்குத் தொடங்கி, அது நிறைவேறிய வுடன் அந்நகரம் தூய்மையுடையதாகக் கருதி மக்கள் குடியேறும் பொருட்டு அதனைக் கங்கை நீரால் புனித 1. Ep. Ind., Vol. XII, No. 34. (Miraj Plates of Jayasimha II.) 2. S. I. I., Vol. III, No. 205, Verse 109.