பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 161 மாக்குவதற்கு இவன் எண்ணியிருத்தல் வேண்டும். அது பற்றியே, இவனது வடநாட்டுப் படையெழுச்சியும் நிகழ்ந் திருத்தல் வேண்டும். வடதிசையிலிருந்து கங்கை நீரைக் கொண்டுவருங்கால் அத்திசையிலுள்ள வேந்தர்களையும் போரில் வென்று அதனைக் கொணர எண்ணுதல், வீரம் நிறைந்த பழங்குடியில் தோன்றிய பேரரசன் ஒருவனுக்கு இயல்பேயாம். அன்றியும், கங்கை நீரைச் சோழ நாட்டிற்குக் கொண்டுவருவது அதன் கரைவரையிலுள்ள அரசர்களைப் போரில் வென்று வாகை சூடினால் தான் எளிதில் நிறை வேறும் என்று இராசேந்திரன் கருதியிருக்கலாம். எனவே, இவ்வேந்தன், தன் படைகளைச் சிறந்த படைத்தலைவன் ஒருவன் தலைமையில் வடநாட்டிற்கு அனுப்புவது இன்றி யமையாததாயிற்று. ஆகவே, இவன் தன் படைத்தலைவனைப் பெரும் படையுடன் வடக்கே அனுப்பி, கங்கைக்கரை வரையிலுள்ள அரசர்களை வென்று அன்னோர் தலை களில் கங்கை நீர் நிரம்பிய குடங்களைக் கொண்டு வருமாறு ஆணையிட்டனன். சோழநாட்டுப் படையும் வடநாட்டிற்குப் புறப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணை ஆகிய இரு பேராறுகளுக்கும் இடையிலுள்ள வேங்கி நாடு, சோழர்க்கு நெருங்கிய உற வினரான கீழைச்சளுக்கிய மன்னர்களால் அந்நாட்களில் ஆளப்பட்டு வந்தமையாலும் அதற்குத் தெற்கேயிருந்த நாடுகள் எல்லாம் இராசேந்திரன் ஆட்சிக்குட்பட்டிருந் தமையாலும் அப்படையெழுச்சி வேங்கி நாட்டிற்கு வடக்கே தொடங்கிற்று எனலாம். அதில் முதலில் கைப்பற்றப்பட் டது சக்கரக்கோட்டமேயாகும். - சக்கரக்கோட்டம் என்பது விசாகப்பட்டினம் ஜில்லா விற்கு வடமேற்கே மத்திய மாகாணத்தில் வத்ச இராச்சி யத்தில் இருந்த ஒரு நகரமாகும். அஃது அவ்விராச்சி யத்தின் தலை நகராகிய இராசபுரத்திற்கு எட்டு மைல் தூரத்தில் இந்திராவதி யாற்றின் தென்கரையில் உள் ளது ; இக்காலத்தில் சித்திரகோட்டம் என்று வழங்கு 11