பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பிற்காலச் சோழர் சரித்திரம் கின்றது 1. நாகர் மரபினர் எனவும் போகவதி புரத்தலை வர் எனவும் தம்மைக் கூறிக்கொண்ட ஓர் அரசர் வழி யினர், கி. பி. பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டு களில் அச் சக்கரக் கோட்டத்திலிருந்து அரசாண்டு கொண் டிருந்தனர். அன்னோர் நாகர் மரபினராதல் பற்றி அவர் கள் அரசாண்ட நாடும் மாசுண தேசம் என்று வழங்கப் பெற்று வந்தது. அதற்குச் சக்கரக்கோட்ட மண்டலம் என்னும் வேறொரு பெயரும் உண்டு. இராசேந்திரனுடைய படைத்தலைவனால் கைப்பற்றப்பட்ட மதுரை மண்டலம், நாமணைக்கோணம், பஞ்சப்பள்ளி ஆகிய இடங்கள் அந்த வத்ச இராச்சியத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனவே, அவைகள் வேங்கி நாட்டிற்கு வடக்கே இருந்தன என்பது ஒருதலை. பிறகு, அப்படைத்தலைவன் ஆதி நகரில் இந்திரரதன் என்பவனை வென்று ஒட்டர தேயத்தையும் கோசல நாட் டையும் 2 பிடித்துக் கொண்டனன். அக் கோசலம், மகா கோசலம் என்று வழங்கும் தென்கோசல நாடாகும். தாரா நகரத்திலிருந்த போசராஜனுக்கு 3 இந்திரரதன் என்னும் பகைவேந்தன் ஒருவன் இருந்தனன் என்பது உதயபுரக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. அவ் விந்திரரதனே ஆதி நகரில் நிகழ்ந்த போரில் தோல்வி யுற்று ஒட்டர தேயத்தையும் தென்கோசல நாட்டையும் 1. Ep. Ind., Vol. IX, pp. 178 and 179. சித்திரகோட்டம் -Chitrakut. சில கல்வெட்டுக்களில் நம் இராசேந்திரன் ' பூர்வதேசமுங் கங்கையுங் கடாரமுங்கொண்ட கோப்பரகேசரிவர்மன்' என்று கூறப்படுகிறான். இதில் குறிப்பிடப்பெற்ற பூர்வ தேசம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள சட்டிஸ்கார் (Chattisgarh) பகுதியாகும். (Ep. Ind., Vol. IX, p. 283) அது பூர்வ ராஷ்டிரம் என்றும் முற்காலத்தில் வழங்கப் பெற்று வந்ததாம். அப் பூர்வதேசம் தென் கோசலத் தைச் சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். 3. வடமொழிப் புலவர்களை ஆதரித்த போசன் இவனே யாவன்.