பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 163 இழந்தவனாதல் வேண்டும் என்று டாக்டர் கெல்ஹார்ன் கருதுவது மிகப் பொருத்தமுடையதேயாம். அதன் பின்னர், தன்மபாலனுடைய தண்டபுத்தியும் இரணசூரனது தக்கணலாடமும் கோவிந்தசந்தனுக்குரிய வங்காள தேசமும் மகிபாலனது உத்திரலாடமும் இரா சேந்திரன் படைத்தலைவனால் கைப்பற்றப்பட்டன. அவ் வேந்தர்களை வென்று அவர்களுடைய நாடுகளைப் பிடித்த பிறகு அப் படைத்தலைவன் கங்கைக்கரையை அடைந்தான் என்று மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அந்நாடுகளுள், தண்டபுத்தி என்பது வங்காள மாகா ணத்தில் மிதுனபுரி ஜில்லாவின் தென்பகுதியும் தென் மேற்குப் பகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும். எனவே, அது சொர்ணரேகை யாற்றின் இருகரையிலும் பரவி யிருந்த நாடெனலாம். ஆகவே, அஃது ஒட்டரதேயத் திற்கும் வங்காளத்திற்கும் இடையில் அமைந்திருந்த ஒரு நாடு என்பது திண்ணம்.' வங்காளத்திலுள்ள பர்த்துவான் என்னும் நிலப்பரப்பு முற்காலத்தில் வர்த்தமானபுத்தி என்ற பெயருடையதாயிருந்தது என்றும் அதிலிருந்த ஓர் உள் நாட்டிற்குத் தண்டபுத்தி மண்டலம் என்ற பெயர் வழங்கியது என்றும் தெரிகின்றன. தக்கணலாடம், என்பது வங்காளத்திலுள்ள ஹூக்ளி (Hooghly) ஹௌரா (Howrah) ஜில்லாக்களைக்கொண்ட நாடு ; உத்தரலாடம் என்பது மூர்ஷிதாபாத் (Murshidabad) பீர்பூம் (Birbhum) ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்ட நாடாகும். தண்டபுத்தி மண்டலத்திற்குக் கிழக்கே 1. Ep. Ind., Vol. VII, p. 120. 2. Ep. Ind., Vol. XXII, pp. 153 and 154. 3. Palas of Bengal, p. 71. 4. Ep. Ind., Vol. XXII, No. 25. (Irada Copper plate of the Kamboja King Nayapaladeva) 5, Ep. Ind., Vol. XXVII, p. 24.