பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பிற்காலச் சோழர் சரித்திரம் தக்கணலாடமும் அம்மண்டலத்திற்கு வடக்கிலும் வட கிழக்கிலும் உத்தரலாடமும் இருந்தன என்பது உணரற் பாலது. வங்காள தேசம் என்பது கீழ் வங்காளமாகும். தண்ட புத்தியை யாண்ட தன்மபாலனும் தக்கணலாடத்தை யாண்ட இரண சூரனும் வங்காள வேந்தனாகிய கோவிந்த சந்தனும் உத்தரலாடத்திலிருந்து அந்நாளில் அரசாண்ட பேரரசனாகிய மகிபாலனுக்குட்பட்ட குறுநில மன்னர்களா யிருத்தல் வேண்டும் என்பது இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியினால் உய்த்துணரக் கிடக்கின்றது. அவர் களுள், மகிபாலனைத் தவிர மற்றையோர் செய்திகள் தெரியவில்லை. தன்மபாலன் என்பவன், ஒருகால் மகி பாலனுக்கு உறவினனாக இருப்பினும் இருக்கலாம். சோணாட்டுப் படைத்தலைவன்பால் தோல்வியுற்ற வட வேந்தர்களை நிரல்படக் கூறுவதில், இராசேந்திரன் மெய்க்கீர்த்திக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளுக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகிறது. மெய்க்கீர்த்தி, அப்போர் நிகழ்ச்சிகள் முடிவெய்தியவுடன் எழுதப்பெற்றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள், சில ஆண்டுகளுக்குப் பின்னர் வரையப்பெற்றவை. ஆதலால், மெய்க்கீர்த்தியில் உள்ளவையே நேர்மையானவை என்று கொள்வது மிகப் பொருந்தும். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் கூறப் பெற்ற வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டால் உத்தரலாட வேந்தனாகிய மகிபாலனை அப்படைத்தலைவன் வென்றது, கங்கைகொண்டு திரும்புங்கால் நிகழ்ந்த நிகழ்ச்சி என்று கொள்ளல் வேண்டும். இனி, மகிபாலன் என்பான் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வங்காள மாகாணத்தை ஆட்சி புரிந்த பால மரபினர் வழியில் தோன்றிய வேந்தன் ஆவன். அவனது ஆட்சி வடக்கே காசி வரையில் பரவியிருந்தது என்று தெரிகிறது. அந்நாளில் வங்காள மாகாணம் பல உள்