பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xviii

போர்-அரிசிற் கரைப்போர்- விசயாலயன் முதுமையும் இரண்டாம் வரகுண பாண்டியன் படையெடுப்பும் - இள வரசனாகிய ஆதித்த சோழன் அவனை எதிர்த்துப் பொரு தமை - திருப்பு றம்பயப் போர் -- கங்க மன்னன் முதற் பிருதுவிபதி அப்போரில் இறந்தமை-அப்போரில் பல்ல வர் சோழர்களின் வெற்றி - அதன் பயனாக ஆதித்த சோழன் சோழ மண்டலத்தில் முடிமன்னனாதல்-- விசயா லயன் எடுப்பித்த கோயில்-இவன் பெயரால் அமைந்த ஊர்கள்- இவ்வேந்தனது இறுதிக்காலம்.

4.முதல் ஆதித்த சோழன்

28-36

ஆதித்தன் முடிசூடிய காலம் - இவனது புனை பெயர் - இவன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியமைதொண்டை நாடு பரவின சோழன் இராசகேசரிவர்மன் இவனே என்பது - விக்கியண்ணன் செம்பியன் தமிழ வேள் என்ற பட்டம் பெற்றமை-ஆதித்தன் கொங்கு மண்டலத்தை வென் றமை-இவன் கொங்கு நாட்டி லிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தது- இவன் காலத்தவர் நம்பியாண்டார் நம்பி-இவனது சமயத்தொண்டு - இவன் திருப்புறம் பயம், திரு எறும்பியூர்க் கோயில்களைக் கற்றளிகளாக எடுப்பித்தமை- இவன் மனைவிமாரும் மக்களும்தொண்டைமான் ஆற்றூரில் இவன் இறந்தமை -அவ் வூரில் இவன் புதல்வன் முதற் பராந்தகன் பள்ளிப்படை அமைத்தல்.

5.முதற் பராந்தக சோழன்

37-61

பராந்தக சோழன் முடிசூடிய காலம்- சோழ இராச்சியத் தின் நிலை--பராந்தகன் மூன்றாம் இராசசிம்ம பாண்டியனை வெள்ளூர்ப் போரில் வெல்லல்-பராந்தகன் ஈழநாட்டு உதயமன்னனோடு நடத்திய போர் - வாணர் வரலாறு-- பராந்தகன் வாணர்களுடன் நடத்திய போர் - தோல்வி யுற்று நாடிழந்த வாணர்கள் - பராந்தகன் வைதும்ப மன்னனை வென்றமை-இவன் சீட்புலி நாட்டை வென் றமை-சோழ இராச்சியத்தின் பரப்பு - சோழர்க்கும் இராஷ்டிர கூடர்க்கும் ஏற்பட்ட மணத்தொடர்பு