பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 169 எய்தியமைக்குக் காரணம் நன்கு புலப்படவில்லை. ஒரு கால் வாணிகம் காரணமாக அந்நாட்டில் தங்கி யிருந்த தமிழ் மக்கள் உரிமைகளைக் காப்பாற்றும் பொருட்டு இராசேந்திர சோழன் அப்படையெடுப்பைத் தொடங்கி யிருத்தல் கூடும். அஃது எவ்வாறாயினும், தமிழ் மக்களின் வாணிக வளர்ச்சியின் பொருட்டு அப்படையெழுச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்று கொள்வது பொருந்தும் எனலாம். ஸ்ரீவிசய நாட்டைச் சோழ இராச்சியத்திற்கு உட்பட்டதாகச் செய்து அந்நாட்டு வேந்தனைத் தனக்குக் கப்பஞ் செலுத்தும் சிற்றரசனாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் இராசேந்திரனுக்கு இருந்ததா என்பது தெரிய வில்லை . இவ்வேந்தன், தன்னுடைய சிறந்த கப்பற்படையின் துணைகொண்டு, கடல் நடுவிலுள்ள கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கவர்மனைப் 1 போரிற் புறங் கண்டு அவனது பட்டத்து யானையையும் பெரும் பொரு ளையும் வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டு ஸ்ரீவிசயம், பண்ணை , மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங் கம், இலாமுரி தேசம், நக்கவாரம், கடாரம் ஆகிய இடங்களை யும் கைப்பற்றினன் என்பது இவன் மெய்க்கீர்த்தியினால் அறியப்படுகிறது. அவற்றுள், கடாரம் என்பது ' பரக்கு மோதக் கடாரம்' 2 எனவும் ' குளிறு தெண்டிரைக் குரை கடாரம் ' 3 எனவும் கலிங்கத்துப்பரணியில் கூறப்பட்டிருத்த லால் அது கடற்கரையில் அமைந்திருந்த ஒரு நகரம் என்பது வெளியாகின்றது. செப்பேடுகளில் வரையப்பெற்றுள்ள வட மொழிப்பகுதியில் அது கடாகம்+ என்று குறிக்கப்பட்டுள் 1. இவன் சூளாமணிவர்மனுக்குப் பேரனும் மாரவிசயோத் துங்கவர்மனுக்குப் புதல்வனும் ஆவன். 2. கலிங்கத்துப்பரணி, பா. 138. 3. ஷ பா. 189. 4. Ep. Ind., Vol. XXII, No. 34.