பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பிற்காலச் சோழர் சரித்திரம் ளது. பத்துப் பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலையில் சொல் லம்படும் காழகம்' எனப்படுவது கடாரமேயாம் என்பது அதற் குரைகண்ட நச்சினார்க்கினியர்' கருத்து. அவ்வாசிரியர் தக்க ஆதாரமின்றி அங்ஙனம் கூறார் என்பது ஒருதலை. ஆகவே, கடைச்சங்க காலத்தில் காழகம் என்று வழங்கிய கடாரத் துடன் தமிழ் நாட்டார் வாணிகத் தொடர்புடையவராய் வாழ்ந்துவந்தனர் என்பது பட்டினப்பாலையால் நன்கு புலப் படுகின்றது. அதனோடு சீன தேயத்தினரும் அந்நாளில் வாணிகஞ் செய்துவந்தனர் என்பது அந்நாட்டு வரலாற்றுக் குறிப்புக்களால் அறியப்படுகிறது. அத்தகைய சிறப்புவாய்ந்த கடாரம் மலேயாவின் மேல்கரையில் தென்பக்கத்தில் கெடா 2 என்னும் பெயருடைய நகரமாக இக்காலத்திலிருத்தல் அறி யத்தக்கது. ஸ்ரீவிசயம் என்பது சுமத்ரா என்று இக்காலத்தில் வழங் கும் சொர்ண தீவத்திலுள்ள பாலம்பாங் என்னும் இராச் சியமாகும் 3. அது கி. பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையில் சிறந்து விளங்கியதோடு தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டும் நிலவியது. அதனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களைச் சீனதேயத்து நூல்களில் மிகுதியாகக் காணலாம். பண்ணை என்பது சுமத்ரா தீவின் கீழ்கரையில் உள்ள ஊராகும் 4. அஃது இந்நாளில் பனி, பனை (Pani or Panei) என்று வழங்கப்படுகிறது. மலையூர் என்பது சுமத்ராவின் கீழ்கரையில் இருந்தது என்று ஒரு சாராரும் மேல்கரையில் இருந்தது என்று மற் றொரு சாராரும் மலேயாவின் தென்பகுதியில் இருந்தது என்று பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். எனவே, அஃது 1. பட்டினப்பாலை, வரி 191 2. Ep. Ind., Vol. XXII, page 282. 3. The Colas, Vol. I, p. 259. 4. Ibid.