பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 171 எங்கிருந்தது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் அந்நாட்டில் தான் மலையூ என்னும் ஆறு ஓடியது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அது பாலம்பாங் இராச்சி யத்திற் கண்மையில் இருந்திருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர் 1. ஹாலண்டு தேயத்தினரான ஓர் ஆராய்ச்சி யாளர் அது ஜம்பி (Jambi) என்னும் நாடாகும் என்று உறுதி செய்துள்ளனர்.2 மாயிருடிங்கம் என்பது மலேயாவின் நடுவில் இருந்த தாம். சீன தேயத்தினர் அதனை ஜிலோடிங் (Ji-lo-ting) என்று வழங்கியுள்ளனர் 3. இலங்கா சோகம் என்பது மலேயாவிலுள்ள கெடாவிற் குத் தெற்கே இருந்தது என்று தெரிகிறது. அது சீன தேயத்தினரால் + லிங்-யா-சென்-கியா' (Ling-ya-ssenkia) என்று வழங்கப்பட்டுள்ளது. பப்பாளம் என்பது பப்பாளமா என்று மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பப்பளம் என்ற நாடு ஒன்று முற் காலத்தில் இருந்தது என்பது குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில் ' மாளுவம் சோனகம் பப்பளம் ' என்று ஒட்டக்கூத்தர் கூறியவாற்றான் நன்கறியக்கிடக்கின்றது. எனவே, பப்பாளம் என்பதுதான் அவ்வாசிரியரால் பப்பளம் என்று கூறப்பட்டிருத்தல் வேண்டும். சிங்கள வேந்தனாகிய முதற் பராக்கிரமபாகுவின் ஆணையின்படி அருமண தேயத்தின்மீது கி. பி. 1165-ல் படையெடுத்துச் சென்ற ஆதிச்சன் என்னும் படைத்தலைவன், பப்பாளத்தில்தான் முதலில் இறங்கினான் என்று மகாவம்சம் கூறுகின்றது. எனவே, அது 'கிரா' என்னும் பூசந்திக்கு (Isthmus of Kra) 1. The Colas, Vol. I, p. 262. Foot Note. 2. Ibid, p. 623. 3. Ibid, p. 260. 4. The Colas, Vol. 1, p. 260. 5. குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், பா. 77