பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பிற்காலச் சோழர் சரித்திரம் அணித்தாக இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சி யாளர்கள் கண்ட முடிபாகும்.! இலிம்பங்கம், வளைப்பந்தூர் என்னும் இரண்டும் எவ்விடங்களில் இருந்தன என்பது இப்போது புலப்படவில்லை. தக்கோலம் என்பது கிரேக்க ஆசிரியரான தாலமியால் * தகோலா' என்று குறிக்கப்பட்டுள்ளது. அகில் வகை களில் அருமணவன், தக்கோலி, கிடாரவன் என்பன, சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரால் கூறப் பட்டுள்ளன. அவற்றுள், தக்கோலி என்பது தக்கோ லத்திலிருந்து நம் தமிழ்நாட்டிற்கு அக்காலத்தில் இறக்கு மதி செய்யப்பெற்ற அகில் என்று கருதப்படுகிறது. எனவே, அவ்வூர், நம் தமிழகத்தோடு வாணிகத் தொடர் புடையதாய்ப் பண்டைக்காலத்தில் விளங்கியது என் பது திண்ணம். கிரா பூசந்திக்குத் தெற்கே மலேயாவின் மேல்கரையிலுள்ள தகோபா ஜில்லாவின் தலை நகராகிய தகோபா நகரமே (Takuapa) பழைய தக்கோலம் என்பது அறிஞர்கள் கருத்து. 3 தமாலிங்கம் என்பது சீனதேயத்து நூல்களில் தன்மா லிங் (Tan-ma-ling) என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அது மலேயாவின் கீழ்கரையில் குவாண்டன் (Kwantan) என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்திலுள்ள தெமிலிங் (Temiling) என்னும் நகரமாகும்.4 அதனைத் தெம்பெலிங் என்று வழங்குவதும் உண்டு. தமாலிங்கத்திலிருந்து இலங்கா சோகத்திற்குச் செல்வதற்குத் தரைவழி யொன்று இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அன்றியும், கடல் வழியாகச் சென்றால் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஆறு நாட்களில் செல்லலாம் என்பது அன்னோர் கருத்து. 1. The Colas, Vol, I, p. 261. 2. சிலப்பதிகாரம் (மூன்றாம் பதிப்பு) பக். 378. 3. The Colas, Vol. 1, p. 262. 4. Ibid.