பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பிற்காலச் சோழர் சரித்திரம் " களிறு கங்கை நீ ருண்ண மண்ணையில் காய்சினத் தொடே கலவு செம்பியன் குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும் '1 என்று ஆசிரியர் சயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணி யில் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. அன்றியும், கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர், தாம் பாடிய இரண்டு உலாக்களில், 'தண்டேவிக் கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்கா புரிபுரந்த கற்பகம் '2 என்றும் * கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் ' 3 என்றும் அவ்விரு வீரச்செயல்கள் பற்றியே நம் இராசேந்திரனைப் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம். அவ்வருஞ் செயல்கள் பற்றி இராசேந்திரனுக்குக் கங்கைகொண்ட சோழன், கடாரங்கொண்டான் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் அந்நாளில் வழங்கிய செய்தியும் கல்வெட்டுக்களால் அறியப் படுகிறது இனி, இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியை நோக்கு மிடத்து, இவனது கடார வெற்றியோடு இவன் போர்ச் செயல்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்தின என்று கூறலாம். ஆனால், இவன் மகன் முதல் இராசாதிராசன் மெய்க்கீர்த் தியை ஆராயுங்கால், இராசேந்திரன் கடாரம்வென்ற பிறகு இவனது ஆட்சியின் பிற்பகுதியில் மலை நாடு, ஈழநாடு, மேலைச்சளுக்கிய நாடு என்பவற்றோடு மீண்டும் போர் நிகழ்த்த வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது என்பதும் அக் 1. கலிங்கத்துப்பரணி, பா. 189. 2. விக்கிரமசோழன் உலா, வரிகள் 34-36. குலோத்துங்க சோழன் உலா, வரிகள் 49, 90. 4. S. I. I.. Vol. IV, No. 867. Ibid, Vol. VIII, No. 675. Ibid, Vol. V, No. 633.