பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 175 காலத்தில் இளவரசனாயிருந்த இராசாதிராசன் அப்போர்களை நடத்தி வெற்றி எய்தினான் என்பதும் நன்கு புலப்படுகின்றன. அப்போர் நிகழ்ச்சிகளில் நம் இராசேந்திரன் நேரில் கலந்து கொள்ளாமல் தன் புதல்வர்களைப் பெரும்படைகளுடன் அந் நாடுகளுக்கு அனுப்பிவிட்டுத் தலை நகரில் தான் தங்கியிருந் தனனாதல் வேண்டும். ஆகவே, இராசேந்திர சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை இவன்மகன் இராசாதிராசன் மெய்க்கீர்த்தியின் துணை கொண்டு ஆராய்வது பொருத்தமுடையதாகும். பாண்டி நாடும் சேர நாடும் இராசேந்திரன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன என்பதும் அவற்றை இவன் புதல்வர் களுள் ஒருவன் சோழபாண்டியன் என்னுஞ் சிறப்புப் பெயருடன் மதுரைமா நகரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வந்தனன் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. அந்நிலையில் தம் நாடுகளைக் கைப்பற்றித் தாமே ஆட்சி புரியவேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய்த் தக்க காலத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாண்டியர் மூவரும் உள் நாட்டில் கலகஞ்செய்யத் தொடங்கினர். அதனை யுணர்ந்த இளவரசனாகிய இராசாதிராசன் பெரும் படையுடன் பாண்டி நாட்டிற்குச் சென்று போர்புரிந்து பாண்டி வேந்தர்களான மானாபரணனையும் வீர கேரளனையுங் கொன்றமையோடு சுந்தரபாண்டியன் போர்க்களத்தில் எல்லாவற்றையும் இழந்து தலைவிரித்தோடி முல்லையூர் புகுந்து ஒளிக்குமாறும் செய் தனன் 1. அந்நிகழ்ச்சிகள் எவ்வாண்டில் நடைபெற்றன என்பது தெரியவில்லை. அச்செய்திகளை யுணர்த்தும் பாண்டியர் கல்வெட்டுக்களாதல் சோழபாண்டியர் கல்வெட்டுக்களாதல் பாண்டி நாட்டில் காணப்படாமையானும் இராசாதிராசன் மெய்க்கீர்த்தியொன்றே அவற்றைக் கூறுவதாலும் அப் போர் நிகழ்ச்சிகளைத் தெளிவாக அறிய இயலவில்லை. எனினும், சோழர்களைப் பாண்டி நாட்டைவிட்டுத் துரத்து வதற்குப் பாண்டியர் மூவரும் செய்த முயற்சி இவ்வாறு முடிவெய்தியது எனலாம். 1. S. I. I., Vol. IV, No. 867.