பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xx

8, இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன்

73-86

இவனது இயற்பெயரும் பட்டப்பெயரும் - இவன் பாண் டியருடன் சேவூரில் நடத்திய முதற் போர்-சிங்களப் போரில் தோல்வி- பாண்டியருடன் நடத்திய இரண்டாம் போர்- இவன் மகன் ஆதித்த கரிகாலன் வீரபாண்டி யனைக் கொன்றமை- பராந்தகன் திருமுனைப்பாடி நாட் டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்றித் தன் ஆட்சியின் கீழ் அமைத்தமை-மனைவிமாரும் புதல்வரும் - அமைச்சன் -அன்பிற் செப்பேடுகள் -ஆட்சியின் இறுதி யில் முதல் மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டமைதுரோகிகளுக்குத் தண்டனை -- பராந்தகனது இறுதிக் காலம்-வானவன் மாதேவி உடன்கட்டை ஏறியதுதஞ்சைக் கோயிலில் இவன் படிமம்- இவன் பெயரால் அமைந்த ஊர், ஏரி, கோயில் முதலியவை-ஆட்சியின் சிறப்பு-புலவர் வாழ்த்து-தலைநகர் பழையாறையைப் பற்றிய விளக்கம்.

9. உத்தம சோழன்

87-94

இவன் முடிசூடிய வரலாறு- இவன் ஆட்சியில் சோழ ராச்சியத்தின் பரப்பு-சென்னைப் பொருட்காட்சிச்சாலை யிலுள்ள செப்பேடுகள்-இவனுடைய மனைவிமாரும் புதல்வனும்-இவன் காலத்துச் சேதி நாட்டுக் குறுநில மன்னன் - அரசியல் அதிகாரி அம்பலவன் பழுவூர் நக்கன்இவனது பொற்காசு- இவனது இறுதிக் காலம்- செம்பி யன் மாதேவியார் சைவசமயத் தொண்டுகள் --இவ்வம் மைக்குச் செப்புப் படிமம்.

10.முதல் இராசராச சோழன்

- 95-144

இவனுடைய பெற்றோர்கள் -- பிறந்த நாள் - இயற் பெயர்- முடிசூட்டு விழா -- ஆட்சியின் சிறப்பு-இராசரா சனை இளமையில் வளர்த்தோர்- செப்பேடுகளைப்பற்றிய விளக்கம்- கல்வெட்டுக்களில் முதன் முதலில் மெய்க் கீர்த்தி யமைத்த வேந்தன்-மெய்க்கீர்த்திகள் வரலாற்றா ராய்ச்சிக்குப் பயன்படுதல்-- இவன் சேர நாட்டில் நிகழ்த் திய போர்-- காந்தளூர்ச் சாலையில் கலமறுத்தது - படைத் தலைவன் கம்பன் மணியன் மரகதப் படிமம் கொணர்ந்து