பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxi

திருப்பழனத்தில் வைத்தமை - திக்கு விசயம்-பாண்டி நாட்டில் நிகழ்த்திய போர் - கொல்லத்தில் நிகழ்த்திய போர்--குடமலை நாட்டுப் போர்- கங்கபாடி, நுளம்ப பாடி, தடிகைபாடிகளை வென்று கைப்பற்றியமை- ஈழத் தைக் கைப்பற்றியது - இரட்டபாடி நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று வாகை சூடியமை- வேங்கி நாட்டு நிலை-வேங்கி நாட்டில் சக்திவர்மனுக்கு முடிசூட்டியது - குந்தவை விமலாதித்தன் மணம் - வேங்கி நாட்டில் விமலாதித்தன் ஆட்சி- இராசராசன் கலிங்கத்தில் நடத் திய போர் - பழந்தீவு பன்னீராயிரத்தைக் கைப்பற்றல்சோழராச்சியத்தின் உயர்நிலை - தன் மகன் முதல் இரா சேந்திரனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டல்-இறுதிக் காலத்தில் திருவியலூரில் துலாபாரதானம் செய்தல் - உலோகமாதேவி இரணிய கருப்பம் புகுந்தமை -இராச ராசன் சிறப்புப் பெயர்கள் - அப்பெயர்களால் சோழ மண்டலத்தில் வளநாடுகள் வழங்கி வந்தமை-தஞ்சை யில் இராசராசேச்சுரம் எடுப்பித்தல்-அக்கோயிலைப் பற் றிய .செய்திகள் - கருவூர்த்தேவர் பதிகம்- அப்பரடிகள் திருவீழிமிழலைத் திருப்பதிகத்தில் குறித்துள்ள தஞ்சைத் தளிக்குளமே தஞ்சை இராசராசேச்சுரம் என்பது - இரா சராசனது சமயப் பொறை --சோழராச்சியம் முழுதும் அளக்கப் பெற்றமை- உலகளந்தான்- உலகளந்த கோல் -- சோழ மண்டலத்தின் 9 வள நாடுகள் - மக்களது அமைதியான வாழ்க்கை - மனை விமார்--இவனுடைய பட்டத்தரசி உலோகமாதேவீச்சுரம் எடுப்பித்தமை -- இவன் தமக்கையிடத்தும் முன்னோரிடத்தும் காட்டிய பேரன்பு-அரிஞ்சயேச்சுரம்- செம்பியன் மாதேவி மண் டபம்-- இவன் காலத்துக் குறுநில மன்னர்கள் - அரசிய லதிகாரிகள் --இராசராச விசயம் - இராசராசேசுவர நாடகம்.

11. முதல் இராசேந்திர சோழன்

145--194

பெற்றோர் - பிறந்த நாள் --இயற்பெயர்-அபிடேகப் பெயர்- முடி சூடிய காலம்-அக்காலத்தில் சோழராச்சி யத்தின் பரப்பு-பரகேசரி இராசேந்திரன்-முதல் மகன் இராசாதிராசன் இளவரசுப்பட்டம் பெற்றமை-இராசேந்