பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 181 யிருத்தலையும் நோக்குங்கால் இவனுக்கு முடிகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் இருந்தமை நன்கு புலனாகும், இவன் தமிழ் மொழியிலும் - வட மொழியி லும் சிறந்த புலமையுடையவனாயிருந்தமைபற்றி இவனைப் பண்டித சோழன் என்று அக்காலத்திலிருந்த அறிஞர்கள் பாராட்டிக்கூறியுள்ளனர். 1 நம் தமிழகத்திற்குத் தென்கிழக்கே யிருந்த ஸ்ரீவிஜய ராச்சியத்தையும் அங்கிருந்த சிறந்த கடற் றுறைப் பட்டினமாகிய கடாரத்தையும் இவனது கப்பற்படை சென்று வென்றமை பற்றிக் கடாரங் கொண்டான் என்னும் சிறப்புப் பெயர் பெற்றனன். இவன் கங்கைகொண்ட சோழன் என்னும் பெயரெய்தியமைக்குக் காரணம் முன் கூறப்பட்டுள் ளது. கிடைத்தற்கரிய அச் சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவுமாறு, இவன் தான் புதியதாக அமைத்த தலை நகர்க்குக் கங்கைகொண்ட சோழபுரம் என்று பெயர் வழங்கினன். இச் செயலால் அச் சிறப்புப் பெயரை எத்துணைப் பெருமை வாய்ந் ததாக இவன் கருதி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளி தின் விளங்கும். இவன் அமைத்த அப்பெருநகர் கங்காபுரி என்று கலிங் கத்துப் பரணியிலும் 2 விக்கிரம சோழன் உலாவிலும 3 கங்கை மாநகர் என்று வீரராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியிலும் 4 கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் 5 புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. அது தஞ்சையம்பதியைக் காட் டிலும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந் திருத்தல் வேண்டும் என்பது திண்ணம், 1, S. 1. I. Vol. II, Nos. 12 and 70. 2. 'கங்காபுரியின் மதிற்புறத்துக் கருதார் சிரம்போய் மிக வீழ இங்கே தலையின் வேல்பாய்ந்த இவை மூழைகளாக்கொள்ளீரே' கலிங்கத்துப்பரணி-களம்பாடியது பா.91. 3. ' கங்காபுரி புரந்த கற்பகமும்' விக்கிரம சோழன் உலா, வரி 36. 4. ' பெரும்புனற்றனாது கங்கைமா நகர் தைத்தபின்' வீரராசேந் திரன் மெய்க்கீ ர்த்தி , Ep. Ind. Vol. XXI, No. 38. 5. ' வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து மண்குளிரச் சாயல் வளர்க்குமாம் - தண்கவிகைக் கொங்கா ரலங்கல் அன் பாயன் குளிர்பொழில்சூழ், கங்காபுரமா ளிகை. தண்டியலங்காரம், 55 மேற்கோள்.