பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பிற்காலச் சோழர் சரித்திரம் இத்தகைய பெருமை வாய்ந்த அந்நகர் இந்நாளில் தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து கும்பகோணத்திற்கு வட கிழக்கில் பத்துமைல் தூரத்திலுள்ள திருப்பனந்தாளுக்கு வடக்கே, கொள்ளிடத்திற்குக் கட்டப்பெற்றுள்ள அணையி லிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெரு வழியில் ஒரு சிற்றூ ராக உள்ளது. அஃது இக்காலத்தில் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவில் இருக்கின்றது. அவ்வூரை ஒரு முறை சென்று பார்ப்பவர்களும் அஃது ஒரு காலத்தில் அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரமாக இருந்தது என்பதை நன்கறியலாம். அந் நகரின் பல பகுதிகள் இப்போது சிற்றூர்களாக அதனைச் சூழ்ந்திருந்தலை யாவரும் காணலாம். அவற்றின் பெயர்களே அவை முற்காலத்தில் ஒரு மா நகரத்தின் பகுதிகளாயிருந் தவை என்பதை நன்கு புலப்படுத்தும். அவ்வூர்க் கண்மையில் தென் மேற்கே உட்கோட்டை என்னும் ஊர் ஒன்றுளது. அங்கே தான் சோழ மன்னர்களுடைய சோழகேரளன், முடி கொண்ட சோழன் முதலான அரண்மனைகள் இருந்தன என்பது ஒருதலை.2 கங்கைகொண்ட சோழபுரத்தில் இப்போது காணப்படும் கல்வெட்டுகளுள் மிகப் பழமை வாய்ந்தது நம் இராசேந்திரன் புதல்வன் வீரராசேந்திரன் கல்வெட்டேயாம். எனினும், இராசேந்திரன் கல்வெட்டுக்களிலும் அந்நகர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.3 அம்மா நகரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் நம் இராசேந்திரன் பெருமையை யுணர்தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலைபெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னுந் திருக்கோயிலேயாகும். அது கங்கைகொண்ட சோழன் எடுப்பித்து வழிபட்டமை 1. உட்கோட்டை, மாளிகை மேடு, ஆயிரக்கலம், வாண தரையன் குப்பம், கொல்லாபுரம், வீரசோழ நல்லூர். சுண்ணாம்புக்குழி, குருகைபாலப்பன் கோயில் என்பன கங்கைகொண்ட சோழ புரத்தின் பகுதிகளாக முன்னர் நிலவியவை. 2. S. I. I., Vol. II, No. 20; Ins. 102 of 1926; Ins. 182 of 1915; Ins. 510 of 1926. 3. Ins. 61 of 1914; Ins. 203 of 1925.