பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 முதல் இராசேந்திர சோழன் யாதவ வீமன் என்பது. 1 இவன் கங்கைகொண்ட சோழ னுடைய மருமகனாகிய இராசராச நரேந்திரனுக்கு உதவி புரியும் பொருட்டு வேங்கி நாட்டிற்குச் சென்று கலிதிண்டி என்ற ஊரில் மேலைச்சளுக்கியரோடு நிகழ்த்திய போரில் உயிர் துறந்தான். இவனோடு உடன் சென்ற இராசராச பிரமமாராயன், உத்தமசோழ சோழகோன் என்ற படைத் தலைவர்களும் அப்போரில் இறந்தனர். இவர்கள் மூவருக்கும் அவ்வூரில் மூன்று சமாதிக் கோயில்கள் இராசராச நரேந்திர னால் அமைக்கப்பெற்று நிபந்தங்கள் அளிக்கப்பட்டமை 2 அறியத்தக்கதாகும் இந்நிகழ்ச்சி கி. பி. 1035-ல் நிகழ்ந்ததாதல் வேண்டும். 8. கங்கைகொண்டசோழ மிலாடுடையான் : இவன் மேலே குறிப்பிடப்பெற்ற குறுநில மன்னனுக்குப் பின்னர் மலையமானாட்டை அரசாண்டவன். இவன் கி. பி. 1024ல் திருக்காளத்திக் கோயிலில் கார்த்திகை விளக்கீட்டிற்கு நிவந்தமாகப் பொன் வழங்கிய செய்தி, அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்றால் அறியக்கிடக்கின்றது. 3 இவனும் இராசேந்திரசோழனுக்கு உட்பட்டிருந்த குறு நில மன்னர் களுள் ஒருவன் ஆவன். 9. க்ஷத்திரியசிகாமணி கொங்காள்வான் : இவன் குடநாட்டிலிருந்த ஒரு சிற்றரசன் ; மனிஜா என்னும் இயற்பெயர் உடையவன். இவனது போர் வீரத்தைப் பாராட்டி இவனுக்கு க்ஷத்திரியசிகாமணி கொங்காள் வான் என்னும் பட்டம் இராசராசசோழனால் அளிக்கப் பெற்ற செய்தி முன் கூறப்பட்டது. இவன் இராசேந்திர சோழன் காலத்தும் கொங்கு நாட்டில் குறு நில மன்னனா யிருந்து அரசாண்டு வந்தான். 1. Ins. 20 of 1905; Ins. 587 of 1908. 2. Eastern Calukyas by Dr. N. Venkataramanayya M. A., pp. 38 and 39. 3. Ins. 291 of 1904.