பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 193 தன் தந்தையிடமிருந்து உரிமையிற்கிடைத்த சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகி, அதனை ஒப்பற்ற உயர் நிலைக்குக் கொணர்ந்து, பெருவாழ்வு பெற்றுப் புகழுடன் விளங்கிய இராசேந்திர சோழன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்து கி. பி. 1044-ல் இறைவன் திருவடியை அடைந் தான் 1. இவன் மனைவியருள் வீரமாதேவி என்பாள் இவனது பெரும் பிரிவிற்கு ஆற்றாமல் உடனுயிர் துறந்தாள் 2. வட ஆர்க்காடு சில்லாவில் பிரமதேசம் என்னும் ஊரில் காணப் படும் கல்வெட்டொன்று, இராசேந்திர சோழன் வீரமாதேவி ஆகிய இருவர் உயிர்கட்கும் நீர்வேட்கை தணிதற்பொருட்டு அவள் உடன்பிறந்தானாகிய சேனாபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்தவேளான் என்பவன் ஒரு தண்ணீர்ப்பந்தல் நிறுவி னான் என்று கூறுகின்றது 3. அன்றியும், அக்கல்வெட்டு, இராசேந்திரசோழன் அடக்கஞ் செய்யப்பெற்ற இடத்திலேயே அத்தேவியும் உயிர் நீத்தாள் என்று உணர்த்துவதால் இவ் வேந்தன் பிரமதேசம் என்னும் ஊரில் இறந்திருத்தல் வேண்டும் என்பதும், இவன் மாதேவியும் அங்கு உடன் கட்டை ஏறியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கறியப்படு கின்றன. எனவே, இவ்வரசர் பெருமான், தன் இராச்சியத் தைச் சுற்றிப் பார்த்தற்குச் சென்றிருந்தபோது தொண்டை மண்டலத்திலுள்ள பிரமதேசம் என்னும் ஊரில் இறந்தனன் என்றுணர்க. இவ்வேந்தனது எட்டாம் ஆட்சி யாண்டில் வெளி யிடப்பெற்ற திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலச் செப் பேட்டினைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தார் அரிதில் முயன்று பெற்றுத் ' தமிழ்ப்பொழில்' என்ற திங்களிதழில் வெளி யிட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும். ' கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள்' என வழங்கும் இது, முதல் இரா . 1. Ins. 79 of 1909. 2. Ins. 260 of 1915. 3. Annual Report on South Indian Epigraphy for 1915-16, p. 118. 13