பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பிற்காலச் சோழர் சரித்திரம் லிருந்து ஆட்சிபுரிந்துள்ளான் 1. எனவே, அவனோடு நம் இராசாதிராஜன் போர்புரிந்து வெற்றி எய்தியமை கி. பி. 1041-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாதல் வேண்டும். ஆகவே, அப்போர் முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் இராசாதி ராசன் நிகழ்த்தியதாதலின் அதனை விளக்கமாக அங்குக் காணலாம். பிறகு, விக்கிரம பாண்டியன் என்னும் இலங்கையரசன் ஒருவனை இராசாதிராசன் கி. பி. 1046-ல் போரில் வென்றான் என்றும் அப்பாண்டியன் தனக்குரிய பாண்டி நாட்டை இவன் பால் இழந்தமையால் ஈழ நாட்டை யடைந்து அதன் ஆட்சியை ஏற்றுக்கொண்டவன் என்றும் மேற்குறித்த மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது. இலங்கையிலிருப்பதற்கஞ்சித் துளுவ நாட்டி லிருந்துகொண்டிருந்தவனும் சோழர்பால் தோல்வி யுற்று அவ்வவமானம் பொருது உயிர்துறந்த மகாலான கித்தியின் புதல்வனும் ஆகிய விக்கமபண்டு என்பவன் ஒரு வன் கி. பி. 1044 முதல் 1047 வரையில் ரோகண நாட்டில் அரசாண்டானென்று மகாவம்சம் கூறுகின்றது. இராசாதி ராச சோழனது மெய்க்கீர்த்தி யுணர்த்தும் விக்கிரம பாண்டிய னும் மகாவம்சம் கூறும் விக்கமபண்டும் ஒருவனே யாதல் வேண்டும். மெய்க்கீர்த்திச் செய்தியைக் கூர்ந்து நோக்கு மிடத்து, அவன் பாண்டிமன்னன் ஒருவனுக்கு இலங்கையர சன் மகள் வயிற்றிற் பிறந்த ஒரு பாண்டிய அரசகுமாரனாக இருத்தல் வேண்டும் என்பதும் தனக்குரிய பாண்டி நாட்டை இராசாதிராச சோழன்பால் இழக்க நேர்ந்தமையால் ஈழ நாட் டிற்குச்சென்று தன் தாய்ப்பாட்டனுக்குரிய ரோகண நாட்டை ஆண்டு வந்தவனாதல் வேண்டும் என்பதும் உய்த்துணரப்படு கின்றன. மகாவம்சம் கூறுவதை நோக்குங்கால், அவன் ரோகணத்தை யாண்ட மகாலானகித்திக்குப் பாண்டிமன்னன் மகள் வயிற்றிற் பிறந்த ஓர் அரசகுமாரனாக இருத்தல் 1. Epigraphia Zeylanica, Vol. III, No. 1.