பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பிற்காலச் சோழர் சரித்திரம் கன்னியாகுப்ஜ வேந்தனென்று மெய்க்கீர்த்திலும் சொல்லப் பட்டிருப்பது அக்கொள்கைக்கு ஒரு தடையாக உளது. அன்றியும் இருவர் காலங்களும் முரண்படுகின்றன. ஆகவே, பிற ஆதாரங்கள் கிடைக்கும் வரையில் அதனை ஒருதலையாகத் துணிதற்கிடமில்லை. இனி, கன்னரன் வழிவந்த ஈழத்தரசனாகிய சீவல்ல பன் மதனராஜன் என்பவன், இராசாதிராசனால் கி. பி. 1046-ல் தோற்கடிக்கப்பட்டான் என்பது இவன் கல்வெட் டால் அறியக்கிடக்கின்றது. மகாவம்சத்தில் அவன் பெயரே காணப்படவில்லை. ஆனால், விக்கம பண்டுவின் புதல்வன் பராக்கிரமபண்டு என்னும் ஈழமன்னன் ஒருவன் சோழரோடு புரிந்த போரில் கி. பி. 1053-ல் இறந்தான் என்று மகாவம்சம் கூறுகின்றது. சீவல்லப மதன ராசனும் பராக்கிரமபண்டு என்பவனும் ஒருவனாகவே இருக்கலாம் என்று கொள்வதற்கு அவ்விருவரும் சோழ ரோடு போர் புரிந்து இறந்த ஆண்டுகள் முரண்படுகின் றன. ஆகவே, அதுபற்றி இப்போது ஒன்றும் கூற. இயலவில்லை. சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களை யும் மகாவம்சத்தையும் ஒப்பு நோக்கி யாராயுங்கால், அக்காலப்பகுதியில் ஈழ மண்டலத்தில் பெரும் பகுதி, சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதும் அதன் தென் கிழக்குப் பகுதியிலிருந்த ஒரு சிறு நாடாகிய ரோகணம் மாத்திரம் ஈழமன்னர் ஆளுகையில் இருந்து வந்தது என்பதும் அவர்கள் தம் நாடு முழுமையும் மீண்டுங் கைப் பற்றியாளுவதற்கு இடைவிடாது முயன்று சோழரோடு போர்புரிந்து வந்தனர் என்பதும் அங்ஙனம் நிகழ்ந்த போர்களில் அந்நாட்டு வேந்தர் சிலர் உயிர் துறக்க நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. சோழர் ஆட்சி ஈழ நாட்டில் நடைபெற்று வந்தமைக்கு அவர்கள் கல்வெட்டுக்களும் பொற்காசுகளும் அந்நாட்டில் காணப் படுகின்றமை சிறந்த சான்றாகும். இனி, இராசாதிராசன் மெய்க்கீர்த்தியில் சொல்லப் பட்டவாறு மேலைச் சளுக்கியரோடு இவன் இரண்டாம்