பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxiii

13. இரண்டாம் இராசேந்திர சோழன்

216-228

இவன் போர்க்களத்தில் முடிசூடியமை - மெய்க்கீர்த்தி கள் - ஈழநாட்டுப் போர்- மேலைச்சளுக்கியருடன் நடத் திய இரண்டாம் போர் - முடக்காற்றுப் போர் - இவன் தம்பிமார்களாகிய இராசமகேந்திரனும், வீரராசேந்திர னும் முடக்காற்றுப்போரில் கலந்துகொண்டமை-இராச மகேந்திரனே மும்முடிச் சோழன் என்பது - தலைநகர்மனை விமார்- மக்கள்-பேரன்மார்-- இவன் தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராசேச்சுர நாடகம் நடிக்க ஏற் பாடு செய்தமை-குறுநில மன்னர்-அரசியல் அதிகாரிகள்.

14. வீரராசேந்திர சோழன்

229-251

பெற்றோர் - பிறந்த நாள்- முடி சூடிய காலம் - மெய்க் கீர்த்திகள்- மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதல் போர் -- இரண்டாம் போர் - மூன்றாம் போர் (கூடல் சங்க மத்துப் போர்)-பொத்தப்பி வேந்தன், கேரளன், பாண் டியன் வீரகேசரி என்பவரை வென் றமை-மேலைச்சளுக் கியருடன் நடத்திய நான்காம் போர்-ஐந்தாம் போரில் சில சிறப்பு நிகழ்ச்சிகள் -- விசயவாடைப்போர்- ஈழ நாட்டுப்போர் -- கடாரப்போர்-மேலைச்சளுக்கியனான சோமேசுவரனை வென்று நாட்டை அவன் தம்பி விக்கிர மாதித்தனுக்கு அளித்தல் - இவன் செய்த அறச்செயல் கள்-தலைநகர் - சிறப்புப்பெயர்கள் - வீர சோழியம் இயற்றுவித்தமை-மனைவிமார்-மக்கள் - புதல்வர்கள் தொண்டை நாட்டிலும் பாண்டி நாட்டிலும் அரசப் பிரதி

நிதிகளாயிருந்தமை-அரசியல் தலைவர்கள்.

15. அதிராசேந்திர சோழன்

252-261

பெற்றோர்கள் - முடிசூடிய காலம்- சில திங்களில் இறந் தமை- இறந்தமைக்குப் பில்ஹணர் கூறும் காரணம் பொருந்தாமை- மெய்க்கீர்த்திகள் - நோய்வாய்ப்பட்டு இறந்தமை- திவ்யசூரி சரிதம் கூறும் செய்தி வரலாற் றிற்கு முரண்பட்டிருத்தல்-அதனை நம்பக்கூடாமைக்குக் காரணம்-முதற் குலோத்துங்கன் இவனைக் கொன்று நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுவது பொருந் தாமை.