பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பிற்காலச் சோழர் சரித்திரம் போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரசலாமேகன் கலிங்க மன்னன் என்று இவ்விராசேந்திரன் மெய்க் கீர்த்தி கூறுகின்றது.. இராசாதிராசன் ஆட்சியில் நடைபெற்ற ஈழ நாட்டுப் போரில் கொல்லப்பட்ட வீரசலாமேகன் என்பான் கன்னியாகுப்ஜத்தரசன் என்று அவன் மெய்க் கீர்த்தி உணர்த்துகின்றது. எனவே, ஒரே பெயர் கொண்ட அவ்விருவரும் வெவ்வேறு நாட்டிலிருந்து இலங் கைக்குச் சென்று அதனை ஆட்சி புரிந்து, இருவேறு சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் போரில் கொல்லப்பட்டவர் என்பது அறியத்தக்கது. சிறை பிடிக்கப்பெற்ற மானா பரணன் புதல்வரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. நம் இராசேந்திரன் கல்வெட்டு ஈழநாட்டில் காணப்படுவதால் அந்நாடு இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது திண்ண ம். | இராசேந்திரன் ஆட்சியில் நிகழ்ந்த இரண்டாம் மேலைச் சளுக்கியப்போர் கி. பி. 1059-ஆம் ஆண்டில் நடைபெற் றிருத்தல் வேண்டும் என்பது திருமழபாடியிலுள்ள இவ னது ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியப் படுகின்றது. மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவ மல்லன் தான் கொப்பத்துப் போரில் அடைந்த அவமா னத்தை நினைத்து வருந்தி அதனை ஒருவாறு போக்கிக் கொள்ளும் நிமித்தம்- பெரும் படையுடன் புறப்பட்டுப் பேராறாகிய கிருஷ்ணையின் கரையில் மீண்டுஞ் சோழ ரைச் சந்தித்துக் கடும் போர் புரிந்தான். முடக்காற்றுப் போர் என்று இராசேந்திரன் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றிருப்பது இப்போரேயாம். இதிலும் மேலைச்சளுக்கியர் 1. S. I. I., Vol. V, No. 644. 2. Ibid, No. 978. 3. Ibid, Vok IV, Nos. 1408 and 1415. 4. எட்டாம் ஆண்டுக் கல்வெட்டில் அப்போர் நிகழ்ச்சி காணப் படவில்லை . (S. I. I., Vol V, No. 644) 5. S. I. I., Vol. V, No. 647.