பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பிற்காலச் சோழர் சரித்திரம் கல்வெட்டு, உணர்த்துகின்றது. அப்பெயர்களுள், இராச மகேந்திரன் என்னும் பெயர் காணப்படாமையே, அப்பெய ருடைய அரச குமாரன் இராசேந்திரனுடைய புதல்வன் அல்லன் என்பதை ஒருதலையாக வலியுறுத்தல் அறியத் தக்கது. இரண்டாம் இராசேந்திரன் தன் முதற் புதல் வனுக்கு உத்தம சோழன் என்னும் பட்டம் வழங்கினான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றனவேயன்றி2 இராச மகேந்திரன் என்னும் பட்டம் வழங்கினான் என்று யாண்டும் கூறவில்லை. எனவே, இராசமகேந்திரன் என்பான் இரண்டாம் இராசேந்திரன் மகன்' அல்லன் என்பதும் தம்பியேயாவன் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க. . இனி 'மனுவினுக்கு மும்முடி நான்மடியாஞ் சோழன்' என்ற கலிங்கத்துப்பரணிப் பாடலும் 'தருமநெறி நிற்ப மனுநெறி நடத்திய கோவிராஜ கேசரிவர்மரான உடையார் ஸ்ரீ இராசமகேந்திர தேவர்' என்ற கல்வெட்டுப்பகுதியும் அவன் செங்கோற் சிறப்பையும் நீதி மாண்பினையும் தெற்றென விளக்கி நிற்றல் அறியற்பாலதாம். அவன் இளவரசனாயிருந்தபோதே இறந்தனன் என்று தெரிகிறது. நம் இராசேந்திரனுக்கும் கங்கைகொண்ட சோழபுரமே தலை நகராயிருந்தது என்பது திருமழபாடி முதலான ஊர் களிலுள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இவ னுக்கு மனைவியர் சிலர் இருந்துள்ளனர். அவர்களுள், கிழா னடிகள். திரைலோக்கிய முடையாள் என்ற இருவரைத் தவிர மற்றையோர் பெயர்கள் தெரியவில்லை. இவனுக்குப் 1. S. I. I., Vol. V, No. 644. 2. Ibid, No. 647. 3. Ibid. 4. T. A. S., Vol. 1, page 165. 5. S. I, I., Vol. V, No. 512.