பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பிற்காலச் சோழர் சரித்திரம் பட்டுள்ளது. எனவே, இவன் சகம் 984-க்குச் சமமான கி. பி. 1062-ஆம் ஆண்டில் பட்டங்கட்டப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவன் தமையனாகிய இரண்டாம் இராசேந்திரசோழன் தான் இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்னரே இவனுக்கு இளவரசுப்பட்டம் கட்டிச் சிறப்பித்தனனாதல் வேண்டும். கி. பி. 1063-ல் அவன் இறந்தவுடன் இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தி யாக முடிசூட்டப்பெற்றுச் செங்கோல் செலுத்துவானா யினன். இவனுக்கு முன் ஆட்சிபுரிந்த இரண்டாம் இராசேந்திர சோழன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்துகொண்டு இருந்தமையால், சோழமன்னர்களின் ஒழுகலாற்றின்படி இவன் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டான். இவ்வேந்தனுக்கு உரியனவாக இரண்டு மெய்க்கீர்த்தி கள் இவன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. அவற் றுள் ' திருவளர்திரள் புயத்து' என்று தொடங்கும் மெய்க் கீர்த்தி மிகப்பெரியது ; இவனது ஆட்சியாண்டுகள் ஏற ஏற அது வளர்ந்துகொண்டே செல்லுகின்றது. வரலாற் றுண்மைகளை உணர்ந்துகொள்வதற்கு அது பெரிதும் பயன் படுவதாகும். மற்றொரு மெய்க்கீர்த்தி ' வீரமே துணை யாகவும் தியாகமே அணியாகவும்' என்று தொடங்குகின் றது. அது மிகச் சிறியதாயினும் இவனது வீரச்செயல்கள் எல்லாவற்றையும் தொகுத்து மிக அழகாகக் கூறுகின்றது. ஆட்சியாண்டுகள் ஏறவே, அதுவும் சில வேறுபாடுகளை அடைந்துளது. எனினும், இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் அஃது ஒரு நிலையை எய்தி அவ்வளவில் நின்று விடுகின்றது. அது, வீரமே துணையாகவும் தியாகமே அணியாகவும் செங்கோலோச்சிக் கருங்கலி கடிந்து 1. Ep. Ind., Vol. XXV, No. 25.