பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேத்திர சோழன் 233 கி. பி. 1062-ஆம் ஆண்டில் கீழைச்சளுக்கிய மன்னனும் கங்கைகொண்டசோழன் மருமகனும் ஆகிய இராசராச நரேந் திரன் என்பான் வேங்கி நாட்டில் இறந்தான். மேலைச்சளுக் கியமன்னனாகிய ஆகவமல்லன் தன் ஆட்சியின் கீழ் வேங்கி நாட்டைக் கொணர்தற்கும் கீழைச்சளுக்கியரைப் பணிய வைத்துத் தம்மோடு சேர்த்துக் கொள்ளுவதற்கும் அதுவே தக்க காலமென்று கருதி, வனவாசியில் தன் பிரதிநிதியாக இருந்துகொண்டிருந்த மாதண்டநாயகனாகிய சாமுண்ட ராயன் என்பவனைப் பெரும்படையுடன் வேங்கி நாட்டிற் கனுப்பினான். அதையுணர்ந்த நம் வீரராசேந்திரன் தன் பாட்டன் இராசராசசோழன் காலமுதல் நெருங்கிய உற வினாற் பிணிக்கப்பட்டிருந்த வேங்கி நாட்டைக் கைவிடாமற் காக்கும் பொருட்டுத் தானும் பெரும்படையுடன் அங்குச் சென்று சாமுண்டராயனுடன் போர்புரிந்து அவனையுங் கொன்றான்.1 ஆகவே, மேலைச்சளுக்கியர் தம் தாயத்தின ராகிய கீழைச்சளுக்கியரைத் தம்மோடு சேர்த்துக்கொள் வதற்குச் செய்த முயற்சி சிறிதும் பயன்படாமற் போயிற்று. சளுக்கிய தண்டநாயகன் சாமுண்டராயனை வீரராசேந்திரன் வேங்கி நாட்டில் கொன்ற அப்போர் இவன் மேலைச்சளுக் கியரோடு இரண்டாம்முறை நடத்தியதாகும். இனி, வீரராசேந்திரனுக்கும் மேலைச்சளுக்கியருக்கும் மூன்றாம் முறை நிகழ்ந்தபோர், கிருஷ்ணை, துங்கபத்திரை ஆகிய இரு பேராறுகளும் கூடும் இடமாகிய கூடல் சங்க மத்தில் கி. பி. 1064-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 'வடகடலென்ன வகுத்த அத் தானையைக் கடகளிறொன்றால் கலக்கி' என்று வீரராசேந்திரன் கல்வெட்டு ஒன்று கூறு வதால், கடல் போன்ற பெரும் படையைத் திரட்டிக் கொண்டு சளுக்கியர் இவனோடு போர்புரிய வந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, இரு தரத்தினரும் பெரும் படையுடன் கடும்போர் புரிந்தனர் 1. S. I. I., Vol. III, pages 34 and 66.