பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பிற்காலச் சோழர் சரித்திரம் குந்தள வேந்தனாகிய ஆகவமல்லன் தன் இரண்டாம் புதல்வனாகிய விக்கிரமாதித்தன் சோழ இராச்சியத்தின் எல்லையில் வனவாசி, நுளம்பபாடி என்பனவற்றின் வடபகுதி யில் இருந்துகொண்டு, தன்னுடைய இராச்சியத்தின் தென்பகுதியைக் கண்காணித்து வருமாறு ஏற்பாடு செய் திருந்தான்.! நம் வீரராசேந்திரன் முடிசூட்டு விழாவில் ஈடுபட்டுத் தலை நகரில் தங்கியிருந்த காலத்தில் விக்கிர மாதித்தன் தனக்கு அண்மையில் இருந்த கங்கபாடி நாட்டைக் கைப்பற்ற முயன்றனன். அதனையறிந்த வீர ராசேந்திரன் பெரும்படையுடன் புறப்பட்டுச் சென்று, சளுக் கிய விக்கிரமாதித்தனையும் அவன் மாசாமந்தர்களையும் போரில் வென்று, கங்கபாடிக் களத்தினின்று துங்கபத்திரை யாற்றிற்கப்பால் துரத்தினான். அதுவே, இவன் முடி சூடியபின் மேலைச்சளுக்கியரோடு நிகழ்த்திய முதற் போராகும். இனி, வேங்கி நாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த கீழைச்சளுக்கியர் முதல் இராசராசசோழன் காலமுதல் சோழர்க்கு நெருங்கிய உறவினராகவும் அவர்களிடம் பெரும் பற்றுடையவராகவும் இருந்துவந்தனர். அதனால், வடபுலத்தில் அன்னோர்க்குப் பகைமை இல்லாமை யோடு ஆதரவும் நட்பும் என்றும் நிலைபெற்றிருந்தன. அத்தகைய நிலையில் கீழைச்சளுக்கியரை எக்காலத்தும் வைத்துக்கொள்வதற்குச் சோழ மன்னர்கள் முயன்று அதில் வெற்றியும் பெற்றுவிட்டனர். அந்நிலையில் மேலைச்சளுக்கியர் தம் தாயத்தினராகிய கீழைச் சளுக் கியர் வழிவழித் தமக்குப் பகைஞராயுள்ள சோழரோடு சேர்ந்துகொண்டிருப்பதைக் கண்டு பெரிதும் வருந்தி, அவ்விருவரையும் பிரித்துவிட்டுக் கீழைச்சளுக்கியரைத் தமக்கு உற்ற துணைவராக அமைத்துக் கொள்வ தற்குக் காலங் கருதிக்கொண்டிருந்தனர். அதற்கேற்ப 1, Ep. Car., Vol. VII, SK. Nos. 11, 83 and 152. 2. S. I, I, Vol, III, No. 20.