பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரராசேந்திர சோழன் 239 விக்கின்றது. அன்றியும், விக்கிரமாங்கதேவ சரிதமும் அவ்வாறே கூறுகின்றது. அஃது உண்மைச் செய்தி யாகவும் இருக்கலாம். ஆனால், அந்நிகழ்ச்சி வீரராசேந்திர னுக்குத் தெரியாதன்றோ ? அதனால் தான் இவன் பெருங் கோபங்கொண்டு, அவன் பொய்யன் என்றும் புரட்டன் என்றும் கருதி அவனைப்போல் உருவொன்றமைத்து, அதனைப் பல்வகை அவமானங்களுக்கு உட்படுத்தினன் என்க . அங்ஙனம் ஆகவமல்லன் உயிர் துறந்தபோது அவன் இரண்டாம் புதல்வன் விக்கிரமாதித்தன் என்பான் திக்கு விசயஞ் செய்யப்புறப்பட்டு, வேங்கி நாட்டையும் சக்கரக் கோட்டத்தையும் தன்னடிப்படித்தி, கிருஷ்ணையாற்றங் கரைக்குவந்து தங்கியிருந்தான் என்றும் அந்நாட்களில் தன் தந்தை இறந்தமை கேட்டுப் பெரிதும் வருந்தி, தான் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை அங்குச் செய்து முடித்தான் என்றும் பில்ஹணர் கூறியுள்ளனர். எனவே, ஆகவமல்லன், இறப்பதற்கு முன்னர், கி. பி. 1067-ஆம் ஆண்டில் வேங்கி நாடு விக்கிரமாதித்தனால் கைப்பற்றப் பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆயினும், அது, நெடுங்காலம் மேலைச்சளுக்கியர் ஆட்சிக்கு உட்பட்டிருக்க வில்லை என்பது அதேயாண்டில் நம் வீரராசேந்திரன், 'தான்4 கைக்கொண்ட வேங்கை நன்னாடு - மீட்டுக்கொண்டலால் மீள்கிலம் கேட்டு நீ-வல்லனாகில் வந்து காக்கென்று சொல்லி ' விட்டுக் கூடல் சங்கமத்திலிருந்து படையுடன் புறப்பட்டு வேங்கி நாடு நோக்கிச் சென்றான் என்று இவனது கல்வெட்டு ஒன்று கூறுவதால் நன்கறியக்கிடக் கின்றது. அங்ஙனம் வேங்கி நாடு நோக்கிச் சென்ற வீர 1. Ep. Ind. Vol. VII. SK, 136. 2. விக்கிரமாங்க தேவசரிதம், அதிகாரம் IV, 44-68. 3. விக்கிரமாங்கதேவ சரிதம், அதிகாரங்கள் 3. 4. 4, தான் என்றது ஈண்டு ஆகவமல்லனை என்க. 5. S. I. I., Vol. III, No. 30.