பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பிற்காலச் சோழர் சரித்திரம் 3. இராசேந்திர மூவேந்த வேளான்:- இவன் வீரரா சேந்திரன் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல் அதிகாரிக ளுள் ஒருவன்; திருவரங்கன் என்னும் இயற்பெயருடை யவன் ; திருவொற்றியூரில் படம்பக்க நாதர் கோயிலைக் கற் றளியாக எடுப்பித்து அங்கு வீரராசேந்திரன் பெயரால் திருநந்தவனம் ஒன்றும் அமைத்தவன்.! 4. சயசிங்ககுலகால விழுப்பரையன் - இவன் வீர ராசேந்திரன் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல் அதிகாரி களுள் ஒருவன் ; திருவொற்றியூர்க் கோயிலில் வீரராசேந் திரன் பிறந்த ஆயிலிய நாளில் திங்கள் தோறும் விழா நடை பெறுமாறு ஏற்பாடு செய்தவன் ; 2 எனவே, இத் தலைவன் தன் அரசன்பால் கொண்டிருந்த பேரன்பு பெரிதும் பாராட்டத் தக்கது. 5. சேனாபதி வீரராசேந்திர காரானை விழுப்பரையன் :இவன் வீரராசேந்திரன் படைத்தலைவர்களுள் ஒருவன் ; திருவாமாத்தூர்க் கோயிலுக்குப் பொன்னும் பசுக்களும் அளித்தவன். 3 6. வீரராசேந்திர பிரமாதிராசன் :- இவன் வீரராசேந் திரன் உடன் கூட்டத் ததிகாரிகளுள் ஒருவன். 4 7. தாழித் திருப்பனங் காடுடையானான வானவன் பல்லவரையன் ;- இவன் க்ஷத்திரிய சிகாமணி வள நாட்டுப் பனையூர் நாட்டு நேரிவாயில் என்னும் ஊரினன் ; வீரராசேந் திரன்பால் திருமந்திர ஓலை என்னும் உத்தியோகத்தில் அமர்ந் திருந்தவன்.5 8. திருவெண்காட்டு நங்கை மகன் சிவலோக நாதன்:-- இவன் வீரராசேந்திரன் பிறந்த ஆயிலிய நாளில் திங்கள் தோறும் திருவெண்காட்டுப் பெருமானுக்குப் பாலுந் தேனுங் 1, Ins. 228 and 232 of 1912. 2. Ins. 136 of 1912. 3. Ins. 3 of 1922. 4. Ep. Ind., Vol. XXI, No. 38. 5. S. I. I., Vol. III, No. 20.