பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம வீரராசேந்திர சோழன் 249 னுக்கு இவன் மணஞ் செய்து கொடுத்தனன் என்றும் விக்கிரமாங்கதேவ சரிதம் கூறுகின்றது. அப்புதல்வி யின் பெயர் தெரியவில்லை இவனுக்குப் பிறகு முடிசூட் டப்பெற்றவனும் சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு மைத் துனன் என்று விக்கிரமாங்கதேவ சரிதத்தில் கூறப் பெற்றவனும் ஆகிய அதிராசேந்திர சோழன் மேலே குறிப்பிட்ட இரு புதல்வர்களுள் யாவன் என்பது புலப் படவில்லை. நம் வீரராசேந்திரன் தன் தமையன் ஆளவந் தான் என்பவனுக்கும் சுந்தரசோழன் என்பவனுக்கும் பட்டங்கள் வழங்கிச் சில நாடுகளுக்கு அவர்களை அரசப் பிரதிநிதிகளாக அமர்த்தினன் என்று இவன் கல்வெட்டு உணர்த்துகின்றது. ஆனால் அவர் களைப் பற்றியும் அவர் கட்கு அளிக்கப் பெற்ற நாடுகளைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை. இனி, இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் அரசியல் அதி காரிகளாக இருந்தோர் பலர் ஆவர். இவனது திருமுக் கூடல் கல்வெட்டில் அரசியலில் சம்பந்தப்பட்ட எண் பதின்மர் பெயர்கள் காணப்படுகின்றன வேறு கல் வெட்டுக்களிலும் பல அரசியல் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்களுள் சிலரைப்பற்றிய செய்திகளை பாண்க. 1. சேனாபதி கங்கைகொண்ட சோழ தன்மபாலன் :இவன் திருமுக்கூடல் திருமால் கோயிலில் சன நாதன் மண்டபமும் திருச்சுற்று மாளிகையும் கட்டுவித்த வைசியன் மாதவன் தாமயன் என்பவனுடைய புதல்வன்; வீர ராசேந்திரன் படைத்தலைவர்களுள் ஒருவன் ; வைசிய குலத்தினன்; வயலைக்காவூரைத் தன் காணியாக உடைய வன். 2, சேனாபதி வீரராசேந்திர தன்மபாலன்:-இவன் மேலே குறிப்பிடப்பெற்ற தலைவனுக்குத் தம்பியாவன். இவ னும் வீரராசேந்திரன் காலத்துப் படைத்தலைவர்களுள் ஒருவன்.


1. Ep. Ind., Vol. XXI, No. 38.

அடியிற் கான்