பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 பிற்காலச் சோழர் சரித்திரம் களில் குறிக்கப்பெற்றுள்ளனள், முதற் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கி. பி. 1085-ல் வீரராசேந் திரன் மனைவி அருமொழி நங்கை என்பாள் தஞ்சை இராச ராசேச்சுரக் கல்வெட்டொன்றில் சொல்லப்பட்டுள்ள னள். எனவே, அவ்வரசி தன் கணவன் இறந்த பிறகு பதினைந்து ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்தனள் எனலாம். உலக முழுதுடையாளும் அருமொழி நங்கை யும் வெவ்வேறு மனைவியரோ அன்றி ஒருவரோ என்பது தெரியவில்லை இவனுக்கு மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன் என்னும் இரண்டு புதல்வர் இருந்ர்தன என்பது இவன் கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. அவர்களுள் மது ராந்தகனுக்குச் சோழேந்திரன் என்ற பட்டம் வழங்கி, அவன் தொண்டை மண்டலத்தில் அரசப்பிரதி நிதியா யிருந்து ஆட்சிபுரிந்து வருமாறு இவன் முடிசூட்டினான்; மற்றொரு புதல்வனாகிய கங்கைகொண்ட சோழனுக்குச் சோழ பாண்டியன் என்னும் பட்டம் வழங்கி அவன் பாண்டி மண்டலத்தில் அரசப்பிரதிநிதியாயிருந்து அர சாண்டு வருமாறு முடிசூட்டினான். எனவே, இவன் தன் புதல்வர்கள் அரசியல் முறையில் நன்கு பயிற்சிபெற்றுத் தேர்ச்சியடைய வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத் துடன் தன் ஆட்சிக்குட்பட்ட பிற மண்டலங்களில் அவர் களை அரசப்பிரதிநிதிகளாக அமர்த்தினனாதல் வேண்டும். இவனுக்கு ஒரு புதல்வி இருந்தனள் என்றும் அம்மகளை மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்த - 1. S. I, I., Vol. II, No. 58. 2. 'தன்றிருப் புதல்வனாகிய மதுராந்தகனை வாளேந்துதானைச் சோழேந்திரனென்று எண்டிசை நிகழ எழில் முடிசூட்டித் தொண்டைமண்டலங் கொடுத்தருளி திண்டிறல் மைந்தனாகிய கங்கைகொண்ட சோழனை ஏழுயர் யானைச் சோழபாண்டியனென்று ஈண்டுயர் மணிமுடி இசைபெறச் சூட்டி பாண்டி மண்டலங் கொடுத்தருளி' [s. I. I., Vol, V. No. 976.)