பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினைந்தாம் அதிகாரம் அதிராசேந்திர சோழன் கி. பி. 1070 இவ் வேந்தன் வீரராசேந்திர சோழன் புதல்வன். அவன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்தபின்னர், இவன் முடி சூட்டப்பெற்றுச் சோழ மண்டலத்தின் ஆட்சியை ஏற்றுக்கொண்டான் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் தந்தை இராசகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந்தமை யால் அவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற இம் மன்னன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டனன். முதல் குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழா சோழ மண்டலத்தில் கி. பி. 1070-ஆம் ஆண்டு சூன் திங்கள் 9-ம் ஆம் நாள் நடை பெற்றது என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மை யாகும். எனவே, அதிராசேந்திரன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சில திங்களே ஆட்சி புரிந்தனனா தல் வேண்டும். இராசகேசரி வர்மனாகிய வீரராசேந்திர சோழனுக்கும் இராசகேசரி வர்மனாகிய முதற் குலோத்துங்க சோழனுக்கும் இடையில் பரகேசரி வர்மன் என்னும் பட்ட முடைய ஓர் அரசன் சோழ நாட்டில் அரசாண்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அவ்விரு பெரு வேந்தர்க்கும் நடுவில் பரகேசரி வர்மனாகிய நம் அதி ராசேந்திரன் ஆட்சி புரிந்துள்ளனன் 'என்பது தெள்ளிது விக்கிரம சோழன் உலாவில் அவ்விருவர்க்கும் இடையில் 'அங்கவன் பின்-காவல் புரிந்தவனி காத்தோனும் 2 என்று ஒரு சோழ மன்னன் குறிப்பிடப்பட்டிருப்பதும் அச்செய் தியை வலியுறுத்துதல் காண்க. 1. Ep. Ind., Vol. XXV, page 246. Ibid, Vol. VII, p. 7. -- கூடலார் சங்கமத்துக் கொள்ளுந் தனிப்பரணிக்கெண்ணிறந்த துங்க மதயானை துணித்தோனும்-அங்கவன்பின் காவல் புரிந்தவனி காத்தோனு மென்றிவர்கள்