பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலச் சோழர் சரித்திரம் சங்ககாலச் சோழ மன்னர்கட்குத் தலை நகரங்களாக விளங்கிய சிறப்புடையவை ;தஞ்சாவூரும் கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழ அரசர்கட்குத் தலை நகரங்களாக விளங்கிய பெருமை வாய்ந்தவை; பழையாறை நகர், சோழர் பல்லவர்க் குக்கீழ்ச் சிற்றரசரா யிருந்த காலப் பகுதியில் வாழ்ந்து வந்த இடமாகும். பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தும் இம்மாநகர் சோழரது இரண்டாவது தலை நகராய்ச் சிறப்புடன் நிலவியமை அறியற்பாலதாம்.