பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பிற்காலச் சோழர் சரித்திரம் காணப்படுகிறது. சில சோழ மன்னர்கட்கு ஒன்றுக்கு மேற் பட்ட மெய்க்கீர்த்திகளும் கல்வெட்டுக்களில் வரையப்பெற் றுள்ளன தமிழ் வளம் நிறைந்த இம்மெய்க்கீர்த்திகள் எல் லாம் அவ்வேந்தர்களின் அவைக்களப் புலவர்களாக விளங்கிய பெருமக்களால் பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். முதல் இராசராச சோழன் திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்க பாடியுந் தடிகை பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டொழிற் சிங்கள ரீழமண்டலமும் இரட்டபாடி யேழரை யிலக்கமும் முந்நீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரமுந் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன் னெழில் வள ரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராச கேசரி வர்மரான உடையார் ஸ்ரீராச ராச தேவர்க்கு யாண்டு. திருக்கோவலூர்க் கல்வெட்டுப் பகுதி ...........................ஜய ஜய வெ(ன்று) மொழி பன்னிய வாய்மையிற் பணியப் பொன்னியல் விசும்பரிற் கதமும் பசும்பரி வெள்ளுளை நெடுஞ்சுவற் றெடுத்த குறுந்துனைப்படுங்க நள்ளுறப் பொன்ஞாண் வள்ளுற வச்சத் தனிக்கா லரசு மனக்காற் கங்குற் குழம்புபடு பேரிருட் [H]ழம்புபட வுருட்டிய செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன் வழிமுதல் வந்த மஹிபதி வழிமுத லதிபதி நரபதி அஸ்வபதி............. கஜபதி கடலிடங் காவலன் மதிமுதல் வழுதியர் வரைபுக மற்றவர் தேவிய