பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (அம் போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா) தரவு மண்வாழும் பல்லுயிரும் வான்வாழு மிமையவரும் கண்வாழு மாநகர் கிளையனைத் துங் களிகூர அந்தரதுத் துபியியங்க வமரர்க ணடமாட இந்திரர்பூ மழைபொழிய விமையவர்சா மரையிரட்ட முத்தநெடுங் குடைநிழற்கீழ் மூரியர சரியணைமேல் மெய்த்தவர்கள் போற்றிசைப்ப வீற்றிருந்த வொரு பெரியோய்! தாழிசை எறும்புகடை யயன் முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதோறும் பிரியாது சூழ்போகி எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின் அல்வுடம்பி னுயிர்க்குயிராயருள் பொழியுந் திருவுள்ளம் ; அறங்கூறு முலகனைத்துங் குளிர்வளர்க்கு மழைமுழக்கின் திறங்கூற வரைகதிருஞ் செழங்கமல நனிநாண ஒருமைக்க ணீரொன்பா னுரைவிரிப்ப வுணர்பொருளால் அருமைக்கண் மலைவின்றி யடைந்தது நின் றிருவார்த்தை ; இருட்பார வினை நீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென அருட்பாரந் தனிசுமந்த வன் றுமுத லின்றளவும் மதுவொன்று மலரடிக் கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுவன்றி நினக்குரித்தோ புண்ணியநின் றிருமேனி ; அம்போதரங்கம். பேரெண் ஆருயிர்க ளனைத்தினையுங் காப்பதற்கே யருள் பூண்டாய் ஒருயிர்க்கே யுடம்பளித்தா லொப்புரவிங் கென்னாகும் ; காமாறுங் குழன் மழைக்கட் டளிரியலார் தம்முன்னர்க் காமனையே முனந்தொலைத்தாற் கண்ணோட்டம் யாதாங்கொல் ; 1. இது வீரசோழியம் யாப்புப்படலத்திலுள்ள 11-ஆம் கலித்துறையின் உரையில், உரையாசிரியராகிய பெருந்தேவனார் மேற்கோளாக எடுத்துக்காட்டியுள்ள பாடலாகும்.