பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழன் விசயாலயன்

15

இவன் தஞ்சாவூரை யாரிடமிருந்து எப்போது கைப்பற் றிக் கொண்டனன் என்பவற்றை ஈண்டு ஆராய்வாம்.

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலிருந்தவனாக வேலூர்ப்பாளையச் செப்பேடு களால் அறியப்படும் குமாராங்குசன் என்ற சோழ மன்னனுக்கு இவன் புதல் வனாயிருத்தல் வேண்டும் என்று எண்ணப்படுகின்றது. எனினும், இதனை ஒருதலையாகத் துணிதற்கேற்ற ஆதா ரங்கள் இப்போது கிடைத்தில. இவ்விசயாலயன் வழியின ரான பிற்காலச் சோழமன்னரின் ஆட்சிக் காலங்களில் வரையப்பெற்ற அன்பிற் செப்பேடுகளும்2 ஆனைமங்கலச் செப்பேடுகளும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் 4 கன்னியாகுமரிக் கல்வெட்டும் கடைச்சங்க காலத்திற் புகழுடன் விளங்கிய பெருநற்கிள்ளி, கரிகாலன், செங்க ணான், நல்லடி என்னும் சோழ அரசர்களின் வழியில் தோன்றியவன் விசயாலயன் என்று உறுதியாகக் கூறு கின்றன. இச்செய்தி புனைந்துரை என்று எண்ணுவதற் குச் சிறிதும் இடமில்லை. அன்றியும். அக்காலத்திலிருந்த சோழமன்னர்கள், தாம் கடைச்சங்ககாலத்துச் சோழரின் வழித்தோன்றல்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்திருந் தனர் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ள அவர்கள் செப்பேடுகளாலும் கல்வெட்டினாலும் நன்கறியக்கிடக் கின்றது.

சங்ககாலச் சோழரின் வழியினரே கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசு நிறுவிப் புக ழோடு ஆட்சிபுரியத் தொடங்கியவர்கள் என்பது ஒட்டக்


1. S. I. I., Vol. II, No. 98. 2. Epigraphia Indica., Vol. XV, No. 5 3. Ibid. Vol. XXII, No. 34 (The Larger Leiden Plates) 4. S. I. I., Vol. III, No. 205. 5. Travancore Archaeological Series, Vol. III, No. 34.