பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

பிற்காலச் சோழர் சரித்திரம்

கூத்தர் பாடிய மூவருலாக்களினாலும் இனிது பெறப் படுகிறது. இச்செய்தி, கவிச்சக்கரவர்த்தியாகிய சயங் கொண்டாரது கலிங்கத்துப் பரணியாலும் உறுதி யெய்துகின்றது. ஆகவே, கடைச்சங்க காலத்துச் சோழ ரின் வழியில் தோன்றியவனே விசயாலயன் என்பது தெள்ளிதின் விளங்குதல் காண்க.

கி. பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த முத்தரையன், 'தஞ் சைக்கோன்' எனவும் ' தஞ்சை நற்புகழாளன் ' 4 எனவும் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால், தஞ்சைமா நகர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர் தலை நகரா தற்கு முன்னர் முத்தரையர்க்குரிய சிறந்த நகரமாக இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது.

இனி, முத்தரையர் என்பார். தஞ்சைமா நகர்க்கு வட மேற்கே இந்நாளில் செந்தலை என்று வழங்கும் சந்திர லேகைச் சதுர்வேதிமங்கலத்திலிருந்து அதனைச் சூழ்ந்த நாட்டை ஆண்டுவந்த குறு நில மன்னர் ஆவர். தஞ்சைக்கு அண்மையிலுள்ள வல்லமும் அவர்கட்குத் தலை நகராக இருந்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அவர்கள் பெரும்பிடுகு, மாற்பிடுகு, விடேல் விடுகு, பகாப்பிடுகு முதலான பல்லவ அரசர்க்குரிய பட்டங்களை யுடையவர் களாகக் காணப்படுவதால், அம்மரபினர் பல்லவர்க்குத் திறை செலுத்திக்கொண்டு அவர்கட்குக்கீழ்ச் சிற்றரசரா யிருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். பழந் தமிழ்க் குடியினரான முத்தரையரது வரையா வண்மை


1. (1) விக்கிரம சோழனுலா, வரிகள் 25 முதல் 32 முடிய. (2) குலோத்துங்க சோழனுலா, வரிகள் 35-46 . (3) இராசராச சோழனுலா, வரிகள் 29-40 2. கலிங்கத்துப்பரணி, பாடல்கள், 197-200. R | Epigraphia Indica, Vol. XIII, pp. 142 and 144. 5. Inscription No. 202 of 1926. 6. Epi, Ind., Vol. XIII, pages 142 & 143.