பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழன் விசயாலயன்

17

'பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் கருனைச்சோறு' என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய நாலடியாரில் பெரிதும் புகழப்பட்டுளது. அம் முத்தரையரே, கி. பி, எட்டாம் நூற்றாண்டில் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நாட்டைப் பல்லவர் ஆட்சிக்குட்பட்ட குறு நில மன்னராயிருந்து ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன? . அன்றியும், அவர்கள் பாண்டியரைப் போரிற் புறங்கண்ட செய்தியும் அச் செந்தலைக் கல்வெட்டுக்களால் புலனாகின்றது. ஆகவே, அவர்கள் பல்லவர்களோடு சேர்ந்து பாண்டியருடன் போர் நிகழ்த்தினர் என்பது தெள்ளிது' . அக்காலத்தில் பழையாறை நகரிலிருந்து அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை ஆண்டு வந்தவர் சோழர் குடியினர் என்பதும், அன்னோர் தமக்குரிய சோழ மண்டலத்தைத் திரும்பப் பெற்றுத் தம் ஆட்சிக்குள் ளாக்குவதற்குக் காலங் கருதிக்கொண்டிருந்தனர் என்ப தும் முன்னர் விளக்கப்பட்டன. எனவே, கி. பி. 846-ஆம் ஆண்டில் பழையாறை நகரிலிருந்த விசயாலய சோழன் என்பான் முத்தரையர் மரபினனாய ஒரு குறுநில மன்னனைத் தாக்கி அவன் ஆளுகைக்குட்பட்டிருந்த தஞ்சைமா நகரைக் கைப்பற்றிக் கொண்டனன் என்பது தேற்றம்4 . முத்தரைய மன்னன்பால் திறை பெற்றுவந்த பேரரசனும், அவனை அந்நாளில் விசயாலயன் படையெழுச்சியினின்றும் காப்பாற்றாமல் கைவிட்டனன் போலும். பல்


1. நாலடியார், பா. 200. 2. Epi. Ind., Vol. XIII, No. 10; The Pallavas by G. JouveauDubreuil, page 76. | 3. Epi. Ind., Vol. XIII, p. 144 'பல்லவன் வெல்லத்தென்ன ன் முனைகெடச் சென்றமாறன்'. 4. The Colas, Vol. 1, page 135. தஞ்சை வல்லம் முதலான நகரங்கள் முத்தரையர்க்குரியவா யிருந்தன என்று செந்தலைக் கல்வெட்டுக்கள் கூ.றுகின்றன. ஆதலால் அவர்களிடமிருந்து தான் விசயாலயன் தஞ்சையைக் கைப்பற்றி யிருத்தல் வேண்டும்.