பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழன் விசயாலயன்

21

என்னும் பல்லவ அரசனது வாகூர்ச் செப்பேட்டிலும் சொல்லப்பட்டிருக்கின்றது 1. இக் குடமூக்குப் போரில் பல்லவரோடு சேர்ந்து பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்த சோழமன்னன் இவ் விசயாலயனாகவே யிருத்தல் வேண்டும். ஆகவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழ மண்டலத்தின் தென்பகுதி பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதும் அதனைத் திரும்பக் கைப்பற்றுவதற்குப் பல்லவர், கங்கர் முதலானோர் துணை கொண்டு விசயாலய சோழன் முயன்றிருத்தல் வேண்டும் என்பதும் வெளியாதல் காண்க. ஆனால் அம்முயற்சி யில் இவன் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது. பின்னர், கி. பி. 862-ஆம் ஆண்டில் அரிசிலாற்றங்கரை யில் நடைபெற்ற போரில் பல்லவ மன்னனாகிய நிருப துங்க வர்மனும் இலங்கை வேந்தனாகிய இரண்டாம் சேனனும் ஒருங்கு சேர்ந்து மாறவர்மன் பரசக்கர . கோலாகலனைத் தோற்றோடச் செய்தனர்2 . இப்போர் நிகழ்ச்சியிலும் விசயாலய சோழன் கலந்துகொண்டன னாதல் வேண்டும். இவன், பல்லவன் நிருபதுங்க வர்மன் பக்கத்திற் சேர்ந்து போர் புரிந்திருத்தல் வேண்டும் என் பது திண்ணம். அரிசிற்கரைப் போரில் வெற்றி பெற்ற நிருபதுங்க வர்மனது கல்வெட்டுக்கள் கண்டியூர், கோவி லடி, லால்குடி முதலான ஊர்களில்' இதுமுதற் காணப் படு தலால், சோழ மண்டலத்தில் பாண்டியர் ஆட்சிக் குட்பட்டிருந்த நிலப்பகுதியை அப்பல்லவ மன்னன் கைப்


குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர் வெங்கணை தொடை நெகிழ்த்துப் பருதியாற்றலொடு விளங்கின பரசக்கர கோலாகலனும் " 1. S. I. I., Vol. II, part 5, No. 98, postscript, pp. 514 & 515. Epi. Ind., Vol. XVIII, No. 2. 2. Ibid, Vol. II, Part 5, No. 98, Postscript, pp. 514 and 515. Epi. Ind., Vol. XVIII, No. 2 3. Ibid, Vol. V, No. 572. Ibid, Vol. VII, Nos. 521, & 526. Ibid, Vol. IV, No. 531.