பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோழன் விசயாலயன்

23

தாக்கப்பட்டது. அங்கு நிகழ்ந்த போர் நிகழ்ச்சிகளை விளக்கமாக அறிதற்கியலவில்லை. விசயாலயன் புதல் வனாகிய முதல் ஆதித்த சோழன் அந்நாட்களில் இளவரச னாக இருந்தமையின் அவன் வரகுண பாண்டியனை எதிர்த்து இடவையில் போர் புரிந்திருத்தல் கூடும். அவன் பிறவேந்தர் உதவியின்றித் தனியே பாண்டிப் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெறு வதும் எளிதன்று. எனவே, வரகுண பாண்டியன் படை யெழுச்சியினால் சோணாடு பல இன்னல்களுக்கு உட்பட் டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். சோழ மண்ட லத்தின் மற்றொரு பகுதி அபராஜித வர்மன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பது முன்னர்க் கூறப்பட்டுளது. அந் நிலையில், முதல் ஆதித்த சோழனுக்கு உதவி புரிந்து வரகுண பாண்டியன் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியை யும் கவர்ந்துகொள்ளாதவாறு பார்த்துக்கொள்ள வேண் டியது அப்பல்லவ வேந்தனது இன்றியமையாக் கடமை யாயிற்று. ஆகவே, அபராஜித வர்மனும் பாண்டி மன்னனை எதிர்ப்பதற்குப் பெரும்படையுடன் புறப்பட்டான்.


(S. I, I., Vol. II, Introduction p. 23.) ஆகவே, இடவையும் கும்ப கோணம் தாலூகாவில் அவ்வூர்கட்கு அண்மையில்தான் இருந் திருத்தல்வேண்டும். சிலர், இடவை என்பது இடைமருது என் பதன் மரூஉ என்றும் ஆகவே அது திருவிடைமருதூராக இருத் தல் வேண்டும் என்றும் எழுதியுள்ளனர். (Journal of Sri Venkateswara Oriental Institute Vol. IV., p. 168) அன்னோர் கொள்கை தவறாகும். அப்பரடிகள், தம் க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண் டகத்தில் ' இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை' என்று கூறியிருத்தலால் இடைமருதும் இடவை யும் வெவ்வேறு ஊர்களாதல் அறிக. அன்றியும், இடவை என் பது காவிரியாற்றிற்கு வடக்கே இராசேந்திரசிங்க வள நாட்டில் மண்ணி நாட்டிலுள்ள ஓர் ஊர் என்பதும் திருவிடைமருதூர் என் பது அவ்வாற்றிற்குத் தெற்கே உய்யக்கொண்டார் வள நாட்டில் திரைமூர் நாட்டிலுள்ள ஓர் ஊர் என்பதும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்ற ன. (S. I. 1., Vol. II, p. 331; S. I I. Vol. V, No. 706.) ஆகவே, இவ்விரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பது கல்வெட்டுக்களாலும் உறுதியாதல் காண்க.