பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பிற்காலச் சோழர் சரித்திரம்

இனி, விசயாலய சோழன் இப்போர் நிகழ்ந்தபோது உயிர் வாழ்ந்திருந்தனன் என்பது ஒருதலை. ஆனால், இதில் இவன் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் கார ணம் இவனது முதுமை நிலையே எனலாம். இவன் புதல் வன் முதல் ஆதித்தன் இப்போரில் கலந்துகொண்டு பாண்டியனுடன் பொருத செய்தி முன்னர் விளக்கப் பட்டது. இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் கிடைக்காமையின் இவனைப்பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.

புதுக்கோட்டை இராச்சியத்தில் நார்த்தாமலை என்ற ஊருக்குத் தென்மேற்கேயுள்ள ஒரு குன்றின் மேல் விச யாலய சோழேச்சுரம் என்ற கற்றளி ஒன்றுளது 1. அது விசயாலய சோழன் எடுப்பித்த கோயிலாக இருத்தல் வேண்டும். சோழ நாட்டில் விசயாலய சோழ சதுர் வேதிமங்கலம் என்ற ஊர் ஒன்று இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டிருந்தது என்பது தஞ்சைப் பெரிய கோயி லில் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலனாகின்றது 2. அன்றியும், சோழியவளாகம் என்ற ஊர் விசயாலய நல்லூர் என்ற பெயருடன் முற்காலத்தில் நிலவியது என்று அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின் றது 3. இவையெல்லாம் சோழ நாட்டிலும் பிற நாட்டிலும் இவ்வேந்தனது ஆட்சி பரவியிருந்த இடங்களை நன் குணர்த்துவனவாகும்.

தன் வாணாள் முழுமையும் போர்புரிந்து சோழர் பேரர சிற்கு அடிகோலிய விசயாலய சோழன் கி. பி, 881-ஆம் ஆண்டில் விண்ணுலகடைந்தான். இவன் பட்டத்தரசி யைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவனுக்கு ஆதித்த சோழன் என்ற புதல்வன் ஒருவன் உண்டு என்பது முன்


1. Inscriptions of the Pudukottai State, No. 282. 2. S. I. I., Vol, II, No. 69. 3. Ins. 122 of 1931-32.