பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதல் ஆதித்த சோழன்

31

என்று ' கொங்குதேச இராசாக்கள்' என்ற வரலாற்று நூல் கூறுகின்றது.1 அந்நூல் கூறுவது • சோழ வம்சத் திலே விசயாடராயன் மகன் ஆதித்தவர்மராயன் சோழ தேசம் தஞ்சாவூரிலே பட்டங் கட்டிக்கொண்டு கொங்க தேசத்துக்கு வந்து ராசா வேடர்களைச் செயம் பண்ணித் தலைக்காடு என்ற பட்டணங் கட்டிக்கொண்டு இந்த இராச்சியங்களிலேயே அநேக அக்கிரகாரம் சர்வமானிய மாய்த் தருமம் பண்ணி அந்த அரசை ஆண்டனன்'-என் பதாம். ஆதித்தனது கல்வெட்டுக்கள் கொங்கு நாட்டில் காணப்படாவிட்டாலும் இவன்மகன் முதற் பராந்தக சோழனுடைய கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் தொடக்கத்திலேயே அந்நாட்டில் உள்ளன. ஆனால் பராந்தக சோழன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அதனைக் கைப்பற்றிக் கொண்டமைக்குச் சான்று கள் இதுகாறும் கிடைக்கவில்லை. எனவே, அந்நாட்டி லுள்ள அவன் கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் தொடக்கத்திற்கு முன்னரே அந்நாடு சோழர்களால் கைப் பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப் படுத்துகின்றன. ஆகவே, ஆதித்தன் கொங்கு நாட்டை வென்று கைப்பற்றிக்கொண்டான் என்று கொங்குதேச ராசாக்கள் சரிதம் கூறுவது உண்மையாதல் காண்க, அன்றியும், சைவசமய குரவர் மூவரும் பாடியருளிய தேவாரப்பதிகங்களைத் திருமுறைகளாகத் தொகுத்த நம்பி யாண்டார் நம்பி என்பவர், தாம் இயற்றிய திருத் தொண்டர் திருவந்தாதியில் - சிங்கத்துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு -- கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்' என்று கூறியிருப்பது, ஆதித்த சோழன் கொங்கு மண்டலத்தை வென்று அங்கிருந்து பொன்


1. செந்தமிழ்த் தொகுதி 16, பக். 394. இந்நூல் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன் படக்கூடிய ஓர் அரிய நூலாகும். இஃது ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப்படவேண்டும். 2. The Colas, Vol. I page 138. 3. திருத்தொண்டர் திருவந்தாதி, பாடல் 65.