பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பிற்காலச் சோழர்சரித்திரம்

கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலமுகட்டை அப்பொன் னால் வேய்ந்த செய்தியை உறுதிப்படுத்துகின்றது. எனவே, கொங்குதேச ராசாக்கள் சரிதம் கூறும் ஒரு வர லாற்று நிகழ்ச்சி நம்பியாண்டார் நம்பியின் வாக்கினால் வலியுறுதல் அறியத்தக்கது.

இனி, முதற் பிருதிவிபதியின் பெயரனும் மாற மரை யன் புதல்வனுமாகிய இரண்டாம் பிருதிவிபதி என்பான் ஆதித்தன் ஆட்சியின் இருபத்து நான்காம் ஆண்டில் தொண்டை நாட்டிலுள்ள தக்கோலமென்னும் திருவூறற் கோயிலுக்கு ஒரு வெள்ளிக் கெண்டி அளித்தான் என்று அவ்வூரில் காணப்படும் கல்வொட்டொன்று கூறுகின்றது. 1 ஆகவே, ஆதித்த சோழனும் கங்க நாட்டு வேந்தனும் அந் நாட்களில் நண்பர்களாக இருந்தனர் என்பது. இனிது புலப்படுகின்றது.

எனவே, கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சேரன், சோழன், கங்கன் ஆகிய மூவேந்தரும் உற்ற நண்பர்களாயிருந்தனர் என்பது இதுகாறும் கூறியவற்றால் நன்கு விளங்குதல் காண்க.

இனி, இவ்வாதித்த சோழன் காவிரியாற்றின் இரு மருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக எடுப்பித் தான் என்று அன்பிற் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின் றன. இவன் தன் ஆட்சிக்காலத்தில் போர் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், சமயத் தொண்டு புரிவதற்குத் தொடங்கியிருத்தல் வேண்டும். சோழர்க்கு முன்னர் அரசாண்ட பல்லவ அரசர் காலங் களில் சில கோயில்களே கற்றளிகளாக அமைக்கப் பெற்றிருந்தன ; பல, செங்கற்கோயில்களாகவே இருந்தன. அவற்றைக் கற்றளிகளாக அமைக்கவேண்டும் என்ற


1. Ep. Ind., Vol. XIX, No. 12; S. I. I., Vol. V, No. 1368 2. Ep. Ind., Vol. XV, No. 5.