பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பிற்காலச் சோழர் சரித்திரம் இனி, தஞ்சாவூர் ஜில்லாவில் ஐயன்பேட்டைக் கண்மை யிலுள்ள இராசகிரி என்ற ஊர், இவ்வேந்தன் பெயரால் இராசகேசரிச் சதுர்வேதிமங்கலம் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்று வந்தது என்பது கோயில் தேவராயன் பேட்டையிற் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது.. ஆதித்த சோழனுக்கு இருமனைவியர் இருந்தனர். அன்னோர் இளங்கோப்பிச்சி, திரிபுவனமாதேவியாகிய வயிரியக்கன் என்போர். அவர்களுள் இளங்கோப்பிச்சி என்பாள், கி. பி. 897-ல் திருமழபாடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு ஒரு நுந்தாவிளக்கு வைத்துத் திரு விளக்குப்புறமாகப் பத்துக் கழஞ்சு பொன்னும் அளித் துள்ளனள். இச்செய்தியை யுணர்த்தும் அக்கல்வெட் டினால் இவள் வல்லவரையன் மகள் என்பதும் ஆதித்த னுடைய முதல் மனைவி என்பதும் நன்கு வெளியாகின்றன? . ஆகவே, இவள் வேந்தனுக்குப் பட்டத்தரசியாயிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. மற்றொரு மனைவியாகிய திரிபுவனமாதேவி என்பாள், திருப்பூந்துருத்தி, திருச் சோற்றுத்துறை என்ற ஊர்களிலுள்ள சிவன்கோயில்களில் நுந்தா விளக்குகள் வைத்து அவற்றிற்கு நிவந்தமாகப் (b) ' செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீழ் இருந்தோன் குலமுதல் என்பர் (ஷ, பா. 82) (c) 'புலமன் னியமன்னை சிங்கள நாடு பொடிபடுத்த குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன்' (ஷ, பா. 50) இதில் ஆதித்த சோழன் சிங்கள நாட்டோடு போர் நிகழ்த்திய செய்தியை நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதனை விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. 1. Ins. Nos. 235 & 254 of 1923; M. E. R. for 1924 part II, para 8. 2. Ep. Ind., Vol. XXVI, pp. 233 & 234.