பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பிற்காலச் சோழர் சரித்திரம் மும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் 1' என்று குறிப்பிடு வதால் இவனது ஈழ நாட்டுப் படையெழுச்சி கி. பி. 944-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. இவன், பாண்டி நாட்டையும் ஈழ நாட்டையும் வென்ற செய்தி, கலிங்கத்துப்பரணியிலும் குலோத்துங்க சோழ னுலாவிலும் இராசராசசோழனுலாவிலும் சொல்லப்பட் டிருப்பது உணரற்பாலதாம். 2 இனி, பராந்தகனது ஆட்சியின் 15-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற உதயேந்திரச் செப்பேடுகள் இவன் இரண்டு வாணர்குல அரசர்களை வென்று அன்னோரது வாணகப்பாடி நாட்டைக் 'கங்க மன்னனாகிய இரண்டாம் பிருதிவிபதிக்கு வழங்கியதோடு அவனுக்குச் செம்பியன் மாவலிவாணராயன் என்ற பட்டமும் அளித்தனன் என்று கூறுகின்றன. 3 அன்றியும், சோழசிங்கபுரத்தி லுள்ள பராந்தகனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டொன்று 'வல்லாள' என்ற இடத்தில் நடை பெற்ற போரில் இரண்டாம் பிருதிவிபதி என்பான் பகை ஞர்களை வென்று இவ்வேந்தனுக்கு உதவிபுரிந்தா னென்று உணர்த்துவதோடு இவனால் வழங்கப்பட்ட 1. Ins. 553 of 1920. 2. ' ஈழ முந்தமிழ்க் கூட லுஞ்சிதைத் திகல்க டந்ததோர் இசைப ரந்ததும் ' - கலிங்கத்துப்பரணி- இராசபாரம்பரியம், பா. 23 - 'நரபதியர் தாழமுன் சென்றுமதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமுங் கொண்ட இகலாளி'- குலோத்துங்கசோழன் உலா, வரிகள் 44-46 '- எழுபகலில் ஈழ மெழு நூற்றுக் காதமுஞ் சென்றெறிந்து வேழந் திறைகொண்டு மீண்டகோன் ' இராசராசசோழன் உலா, வரிகள் 38--40 3. S. I. I., Vol. II, No. 76.