பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பிற்காலச் சோழர் சரித்திரம் சிற்றரசர், கி. பி. 961, 964, 965-ஆம் ஆண்டுகளில் இருந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர், கிராமம் என்ற ஊர்களில் காணப்படும் மூன்றாம் கிருஷ்ணதேவன் காலத்துக் கல்வெட்டுக் களால் 1 நன்கறியக் கிடக்கின்றது. எனவே, பராந்தகன் பால் தோல்வி யெய்திய வைதும்பராயன் அவ்விருவருள் ஒருவனாதல் வேண்டும். அன்றேல் அன்னோர்க்குத் தந்தையாதல் வேண்டும். இனி, பராந்தகனது ஆட்சியின் 34-ம் ஆண்டாகிய கி. பி. 941-ல் இவன் படைத் தலைவன் சிறுகுளத்தூர் மாறன் பரமேசுவரனான செம்பியன் சோழியவரையன் என்பவன், சீட்புலியை வென்று நெல்லூரையும் அழித் துத் திரும்புங்கால் தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றி யூரில் தங்கி, அவ்வூர்க் கோயிலில் நாள்தோறும் நுந்தா விளக்கு எரிப்பதற்குச் சாவாமூவாப் பேராடுகள் தொண் ணூறு வைத்து வந்தான் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று 2 கூறுகின்றது, சீட்புலி என்பது நெல்லூர் ஜில் லாவின் வட பகுதியிலிருத்த ஒரு நாடு. 3 அந்நாளில் அது கீழைச் சளுக்கிய இராச்சியத்தின் தென் பகுதியிலிருந்தது என்று தெரிகிறது. 4 எனவே. கீழைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் வீமனை வென்றடக்கும் பொருட்டு அப் படையெழுச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப் படையெழுச்சியினால், சீட்புலி நாடும், நெல்லூரும் பராந்தகன் ஆட்சிக்குட்பட்டுப் போயின என்று கூற முடியவில்லை. அஃது எங்ஙனமாயினும், தென் குமரி முதல் நெல்லூர் ஜில்லாவின் வட எல்லைவரையிலும் பராந்தகனது ஆற்றலும் வீரமும் பரவியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இவன், தன் இராச்சியத்தை இங்ஙனம் உயர் நிலைக்குக் 1. Ep. Ind., Vol. VII, pages 142-144. 2. S. I. I., Vol. III, No. 108. 3. Ins. 79 of 1921 4. The Colas, Vol. I, page 153.