பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் வென்று அன்னோர் நாட்டைக் கி. பி. 911,912-ஆம் ஆண்டு களில் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும், வாணர்குல வேந்தனாகிய இரண்டாம். விசயாதித்தன் போரில் இறந்தமையால் அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தன் என்பவன் இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவனிடம் அடைக்கலம் புகுந்து, அவன் ஆதரவிலிருந்துகொண்டு தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இனி, பராந்தகன் வைதும்ப மன்னனையும் போரில் வென்றான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் 2 உணர்த்து கின்றன. வைதும்பர் என்பார் கி. பி. 9-ஆம் நூற்றாண் டில் ரே நாண்டு நாட்டை அரசாண்ட தெலுங்கர் என்றும் அன்னோர் கங்கர்க்குப் பகைஞராகவும் வாணர்க்கு நண்ப ராகவும் இருந்தவர் என்றும் வரலாற்றாராய்ச்சியில் வல்ல பேராசிரியர் ஒருவர் கூறுகின்றனர்.3 பராந்தகன் வாண ரோடு நிகழ்த்திய போரில் அவர்கட்குத் துணைவனாயிருந்த வைதும்ப வேந்தன் ஒருவனையும் வென்றிருத்தல் கூடும். ஆனால், பராந்தகன் போரில் வென்ற வைதும்பன் யாவன் என்பதும் அவன் எந்த நாட்டை ஆட்சி புரிந்து கொண் டிருந்தான் என்பதும் இப்பொழுது புலப்படவில்லை. 4 தோல்வியுற்ற வைதும்ப வேந்தனும் வாணரைப் போலவே இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவ னிடம் அடைக்கலம் புகுந்து அவன்பால் தங்கியிருந் தான். வைதும்ப மகாராசன் என்னும் பட்டமுடைய இரண்டு 1. Ep. Ind., Vol. XXVI, page 114. 2. S. I. I., Vol. II, No, 76. 3. The Colas, Vol. 1, page 152 4. மூன்றாம் கிருஷ்ணதேவன் ஆட்சியின் கீழ் வைதும்ப மகா ராசன் விக்கிரமாதித்தன் என்பவன், மலையமானாடு, வாணகோப் பாடி நாடு. சிங்கபுர நாடு, வெண்குன்றக் கோட்டம் என்பவற்றை ஆண்டுவந்தான் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. (Ins. 16 of 1905) அதன் துணைகொண்டு வைதும்பர் வரலாற்றை அறிய இயலவில்லை.