பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் - 55 போரில் வெற்றி பெற்ற மூன்றாங் கிருஷ்ணதேவன், உடனே அந்நாடு முழுவதையும் தன் ஆட்சிக்குக் கொண்டு வர இயலவில்லை என்பது இதனால் நன்கு புலப்படுகின்றது. ஆகவே, கி. பி. 949-க்கும் கி. பி. 955-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெள்ளாற்றிற்கு வடக்கேயுள்ள திருமுனைப் பாடி நாட்டிலும் அதற்கு வடபால் அமைந்துள்ள தொண்டை நாட்டிலும் பேரரசின்மை அறியற்பால தாம். கி. பி. 955 முதல் கி. பி. 968 வரையில் அவ்விரு நாடுகளும் மூன்றாங் கிருஷ்ணதேவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என் பது அந்நாடுகளில் காணப்படும் அவ்வேந்தன் கல்வெட்டுக் களால் 1 அறியக்கிடக்கின்றது. இனி, சோழ நாட்டில் அவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. ஆனால், அக்காலப்பகுதியில், முதற் பராந்தகன், முதற்கண்டராதித்தன், இரண்டாம் பராந் தகன் என்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களே அந்நாடெங்கும் வரையப்பெற்றிருக்கின்றன. இவற்றால், சோழநாடு மாத்திரம் இராஷ்ரகூட மன்னனது ஆட்சிக் குட்படாமல், சோழ மன்னர்களின் ஆளுகையிலேயே அக் காலப் பகுதியில் அமைந்திருந்தது என்பது தெளிவாக விளங்குதல் காண்க. இஃது இங்ஙனமாக, சில கல்வெட்டுக்கள், மூன்றாங் கிருஷ்ணதேவனைக் ' கச்சியுந் தஞ்சையுங்கொண்ட கன் னரதேவன்' என்று குறிப்பிடுகின்றன. 3 அன்றியும், மூன்றாங் கிருஷ்னாதேவனது கார்காட் செப்பேடுகள், அவன் சோழரை வென்று, அன்னோரது நாட்டைத் தன் பப 1. S. I. I., Vol. VII, Nos. 111, 799, 802, 803, 894, 899, and 994; Ep. Ind., Vol. III, No. 38, C and D; S. I. I., Vol. VI, Nos. 324 and 374. 2. Ins. 465 of 1918; S. I. I., Vol. III, Nos. 111, 112, 119, 120, 121 and 122. 3. S. I. I., Vol. VI, Nos: 362, 324 and 374. Ep. Ind., Vol. III, pp. 284 and 285.