பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பிற்காலச் சோழர் சரித்திரம் என்று குறிப்பிடுவதால் அவன் யானைமேல் வீற்றிருந்த போது உயிர் துறந்த செய்தி நன்கு வலியுறுதல் காண்க. தக்கோலப் போரில் பெருவெற்றி யெய்திய மூன்றாங் கிருஷ்ணதேவன், தொண்டை நாட்டையும் திருமுனைப் பாடி நாட்டையுங் கைப்பற்றித் தன் ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவதற்குச் சில ஆண்டுகள் சென்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. இப்போர் நிகழ்ச்சிக்குப் பின்னர், முதற்பராந்தக சோழனது கல்வெட்டுக்கள் அந்நாடுகளில் யாண்டுங் காணப்படவில்லை. ஆகவே, இப்போரின் பயனாக அந்நாடுகளை இவன் இழந்துவிட் டான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இராஷ்டிரகூட வேந்தனாகிய மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் 1 அவனது ஆட்சியின் 15-ஆம் ஆண்டாகிய கி. பி. 955 முதல்தான் அந்நாடுகளில் காணப்படுகின்றன. ஆகவே, கி. பி. 949 முதல் 955 வரையில் அவன் அந்நாடுகளைத் தன் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுச் சிறிது சிறிதாக அதில் வெற்றியும் பெற்றனன் எனலாம். திருமுனைப்பாடி நாட்டில் கி. பி. 953, 954-ஆம் ஆண்டு களில் குறுநில மன்னனாகவிருந்து அரசாண்டு கொண் டிருந்த முனையதரையன் குலமாணிக்கன் இராமதேவன் என்பான், தன் பேரரசன் பெயரைக் குறிப்பிடாமல் திரு நாம நல்லூர்க் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் பொறித்துள்ளான் 2. அத்தலைவன், அவ்வாண்டுகளில் பழைய சோழர்க்குத் திறை கொடாமலும் புதிய இராஷ் டிரகூடர்க்குத் தலைவணங்காமலும் சுயேச்சையாகத் தன் நாட்டை ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனன் என்பது அக் கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. தக்கோலப் 1. S. I. I., Vol. VII, No. 37; 1bid, Vol. III, No. 7; Ibid, Vol. VIII, No. 301. 2. Ep. Ind., Vol. VII, pp. 136 and 137.