பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் 61 அரிஞ்சயன், 1 உத்தமசீலி 2 என்ற நால்வரும் புதல்வர் ஆவர். வீரமாதேவி, அனுபமா என்ற இருவரும் புதல்வியர் ஆவர். முதற் புதல்வனாகிய இராசாதித்தன் என்பான் தந் தையின் ஆட்சிக்காலத்தில் இராஷ்டிரகூடரோடு நிகழ்த்திய போரில் தக்கோலத்தில் உயிர் துறந்தான் என்பது முன் கூறப்பட்டது. புதல்வியருள் வீரமாதேவி என்பவள் இராஷ் டிரகூட மன்னனாகிய நான்காம் கோவிந்த வல்லவரையனை மணந்தவள். அவள், கி. பி, 935-ல் தக்கோலத்துத் திருவூறல் பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்து அதற்கு நிவந்தமாக அறுபது கழஞ்சு பொன் அளித்துள்ளனன். மற்றொரு மகள் கொடும்பாளூர்ச் சிற்றரசன் ஒருவனை மணந்து வாழ்ந்தனள். இதனால், கொடும்பாளூர்த் தலைவர்கள் சோழர்க்கு உற்ற நண்பராகவும் உறவினராகவும் அந் நாளில் இருந்தனர் என்பது உணரற்பாலதாம். 1. S. I. I, Vol. III, No. 205; Ibid, Nos. 96, 101, 104 and 105. இவனுக்கு அரிகுலகேசரி என்ற பெயரும் உண்டு: இனி அரிகுல கேசரியும் அரிஞ்சயனும் ஒருவரல்லர் எனக் கருதுவாரும் உளர். (The Colas. இரண்டாம் பதிப்பு 134-ஆம் பக்கம்) 2: Ibid, Vol. V, No. 575.