பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பிற்காலச் சோழர் சரித்திரம் மகளாதல் வேண்டும். பிறிதொரு மனைவியாகிய கல்யாணி என்பாள் வைதும்பராயன் மகள் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது! . வேறொரு மனைவி யாகிய பூதி ஆதித்த பிடாரி என்பவள், கொடும்பாளூர்க் குறு நில மன்னன் பூதி விக்கிரம கேசரியாகிய தென்னவன் இளங்கோவேள் மகள் ஆவள்? . இவ்வரசி, திருச்சிராப் பள்ளிக்கு மேற்கே ஏழு மைல் தூரத்திலுள்ள திருச்செந் துறைக் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமும் அளித்துள்ளனள் 3. இவ்வேந்த னுக்குப் பராந்தகன் என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன். அவன் வைதும்பராயன் மகள் கல்யாணி என்ற அரசியின் பாற் பிறந்தவன் என்பது அன்பிற் செப்பேடுகளால் உணரப் படுகிறது.) இவ்வரிஞ்சயன் பேரனாகிய முதல் இராசராச சோழன், வட ஆர்க்காடு ஜில்லாவில் திருவல்லத்திற்கு வடக்கே ஆறு மைலிலுள்ள மேற்பாடி என்ற ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்னுங் கோயில் ஒன்று எடுப்பித்து அதற்கு நிவந்தங்களும் வழங்கியுள்ளனன். அக்கோயில் தன் பாட்டனை நினைவு கூர்தற் பொருட்டு முதல் இராசராச சோழன் அமைத்த தாகும். இச்செய்தியை ' ஆற்றூர்த்துஞ்சின தேவர்க்குப் பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ இராசராசதேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின திரு அரிஞ்சிகை ஈசுவரத்து மகாதேவர்'6 என்னுங் கல்வெட்டுப் பகுதியினால் நன்குணர லாம். அஃது இந்நாளில் சோழேச்சுரம் என்று வழங்கு கின்றது ; ஆனால் அழிவுற்ற நிலையிலிருப்பது வருந்தத் தக்கது. 1. Ep. Ind., Vol. XV, No. 5, Verse 24. 2. S. I. I., Vol. III, No. 96. 3. Ibid, Vol. VIII, No. 626 4. Ep. Ind., Vol. XV, No. 5, Verse 25. 5. S. I. I., Vol. III, Nos. 15, 16 and 17. 6. Ibid, No: 15.